செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 45 வயது நபர் கைது

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 45 வயதான நபர் ஒருவரை வெலிவேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், குறித்த சிறுமியின் பாட்டியார்  சந்தைக்குச் சென்றிருந்தபோது அவ்வீட்டில் தனிமையிலிருந்த சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


மேற்படி நபர் அவ்வீட்டுக்குள் இருந்த நிலையில்இ அயலவர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டாள். சந்தேக நபர்  நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளார்.
 

Views: 534

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.