செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இந்திய தூதரக அனுசரணையில் தோட்டப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

 

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் உரிய தொழிற் பயிற்சியற்று வேலையின்றியுள்ள இளைஞர் யுவதிகளுக்கு கண்டியிலுள்ள இந்திய உதவி தூதரகத்தின் ஊடாக தொழிற் பயிற்சி மற்றும் கணனி பயிற்சி பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் கண்டி இந்திய உதவி தூதுவரிடம் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார்.  இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக நுவரெலியா மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி விண்ணப்பப்படிவங்களை, முரளிரகுநாதன் கண்டி இந்திய உதவி தூதுவரிடம் ஒப்படைத்துள்ளார்.


 

 

Views: 463

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.