செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

11 கொலைகள் தொடர்பான சந்தேக நபரிடம் விசாரணை

 

3 பொலிஸாரை கொலை செய்தமை உட்பட 11 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  எஸ்.பி பிரசாந்த ஜயக்கொடி டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.  2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இச்சந்தேக நபர் 8 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பல ஆயுதத் திருட்டுகள் என்பனவற்றுடனும் சம்பந்தப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேலிய கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

 

Views: 399

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.