செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

தத்துக்கொடுக்கப்பட்ட பெண் 31 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தார்

 

(ஜமீலா நஜ்முதீன்)

இலங்கையில் பிறந்து 6 மாதத்தில் சுவீடன் தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பெண்ணொருவர் 30 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார். சுஸான் மரியா சந்திமா என்னும் பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். இவர் தனது பெற்ற தாயை 31 வருடங்களுக்குப்பின் கண்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

"இறுதியில் நான் என்னைப் பெற்ற தாயைக் கண்டறிந்துள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இதுவே எனது இலங்கைக்கான முதல் பயணம். நான் எனது குடும்பத்தை சந்தித்துவிட்டேன். நான் இனி இலங்கைக்கு அடிக்கடி வருவேன் என்று சந்திமா தெரிவித்துள்ளார்.

அவருடைய தாய் சுவர்னா ஜயசிங்கவினாலும் தனது மகளை கண்ட மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. “நான் மகளை குடும்ப நிலைமை காரணமாக கட்டாயத்தின் பேரிலே சுவீடன் தம்பதியர்களுக்கு தத்துக்கொடுத்தேன். நான் ஒருப்போதும் அவளை தத்துக்கொடுக்க விரும்பவில்லை. நான் 31 வருடங்களாக  பெரும் துன்பத்துடன் இருந்தேன்.

இப்போதுதான் நிம்மதியாக மூச்சுவிடமுடிகிறது. எனது மூத்த பிள்ளை என்னருகில் வந்துவிட்டது. ஒருவாராலும் தாய் - மகள் என்ற உறவை பிரிக்கமுடியாது" என்று சுவர்னா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சுவர்னா மற்றும் சந்திமா இருவரும் ‘பயோ பேரன்ட்ஸ் லொகேட்’ அமைப்புக்கும் அரச வளங்கள் பிரதியமைச்சர் சரத்குணரட்னவுக்கும் ம் தங்களது நன்றியை உணரவுப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

பிரதியமைச்சர் சரத் குனரத்னவும் இந்தச் சந்திப்பின்போது விமானநிலையத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பயோ பேரண்ட்ஸ் லொகேட் அமைப்பின் தலைவர் ரொஹான் ரத்ணாயக்க டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த 25 வருடங்களில் 35,000 சிறுவர்கள் தத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவர்களை அதிகமாக ஐரோப்பிய நாடுகளே தத்தெடுத்துள்ளனர். இவ்வாறானவர்கள் தங்களது உண்மையான பெற்றோர்களை தேடிவருகின்றனர் எனவும் அவர் கூறினார்.  Pix by :- Waruna Wanniarachchi

Views: 858

Comments   

 
0#thiva2010-09-01 05:45
தாய் நாடு என்றும் தாய் நாடு தான்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.