செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

மேல்மாகாணத்தில் ரூ.2,600 மில்லியன் வரி திரட்ட கொழும்பு மாநகரசபை தவறியுள்ளது

(இந்திக்க ஸ்ரீ அரவிந்த)

மேல்மாகாணத்திலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றிடமிருந்து 2,600 ரூபா மில்லியன் பெறுமதியான வரியைத் திரட்ட கொழும்பு மாநகரசபை தவறியுள்ளதாக  உள்ளூராட்சி சேவைகளுக்கான மேல்மாகாண ஆளுநர் எச்.சுமணபால தெரிவித்தார்.

மேற்படி வீடுகளிலும் நிறுவனங்களிலுமுள்ள  வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அடுத்த மாதம் வரியை அறவிடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.(DM)

Views: 383

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.