கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் பயணம் செய்யும் வாகனங்கள் குறித்த வீதி நிரல்களிலேயே பயணம் செய்ய வேண்டும் என கொழும்பு நகர போக்குவரத்துப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
நகரில் விபத்துகளையும் போக்குவரத்து நெரிசலையும் குறைப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் புதிய நிகழ்ச்சித் திட்டங்கள் குறிப்பிடத்தக்க காலம் வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதன்பின் அசட்டையாக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

