செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

தமிழ்மிரரில் பணிபுரிய ஓர் அரிய சந்தர்ப்பம்

 

தேவை

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனத்தின் முதன்மை தமிழ் இணையத்தளத்திற்கு கீழ் குறிப்பிடப்பட்ட வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உதவியாசிரியர்
எமது நிறுவனத்தின் யாழ். கிளைக் காரியாலயத்தில் முழுநேரமாக பணியாற்றுவதற்கு உதவியாசிரியர்கள் தேவை. இந்த பதவி வெற்றிடத்திற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஊடகத்துறை கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கும் அனுபவமுள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மொழிபெயர்ப்பாளர்கள்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்யக்கூடியவர்கள் தேவை. கொழும்புக் கிளையில் பணிபுரியக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களும் பகுதிநேரமாக பணிபுரியக் கூடியவர்களும் வி்ண்ணப்பிக்கலாம்.

பிராந்திய செய்தியாளர்கள்
எமது இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக பணியாற்றக்கூடிய பிராந்திய செய்தியாளர்கள் தேவை.

 

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு போன்ற பிரதேசங்களில் செய்திசேகரிக்கக்கூடியவர்களும், பாணந்துறை, களுத்துறை, பேருவளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொணராகலை, பதுளை, பண்டாரவளை மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் சுயாதீனமாக செய்தி சேகரிக்கக் கூடியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தகைமை
தமிழ் மொழியில் தேர்ச்சியுடையவர்களாக இருப்பதோடு சிங்களம், ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருப்பதும் சிறந்தது. கணினி அறிவு மேலதிக தகைமையாக கருதப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
மேற்படி பதவி வெற்றிடங்களுக்கு தகைமையுடையவர்கள் என்று கருதுபவர்கள் தங்களின் சுயவிபரக் கோவையினை எமக்கு அனுப்பிவையுங்கள்.

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்அல்லது இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் சுயவிபரக் கோவையினை அனுப்பிவைப்பதோடு இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற
 முகவரிக்கும் பிரதியொன்றை அனுப்பவும்.

Views: 1697

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.