செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

72 ஓட்டங்களுடன் இங்கிலாந்து சுருண்டது; 2 ஆவது டெஸ்ட்டிலும் பாகிஸ்தான் வெற்றி

 

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு 145 ஓட்டங்கள் மாத்திரம் பெற வேண்டிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 72 ஓட்டங்களுடன் சுருண்டது.

இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் பாகிஸ்தான் அணி தனதாக்கியுள்ளது. ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து  உலகின் முதல் நிலை அணியாகவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 327 ஓட்டங்களையும் பெற்றன.

போட்டியின் 3 ஆவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காவது நாளான இன்று அவ்வணி 214 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அஸார் அலி 69 ஓட்டங்களையும் அஸாட் சபீக் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில், சுமார் 30 மாதங்களின்பின் டெஸ்ட் போட்டிகளுக்குத் திரும்பிய மொன்டி பனேசனர் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 145 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்கொன்றே நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 15 ஆவது ஓவரில் இங்கிலாந்து 21 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அலிஸ்டர் குக் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போதிருந்து இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ட்ரூ ஸ்ரௌஸ் 32 ஓட்டங்களைப்பெற்றார். மத் பிரையோர் 18 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 7 இற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெறவில்லை. குக் 7 ஓட்டங்களையும் இயன்பெல் 3 ஓட்டங்களையும் பெற்றனர். கெவின் பீட்டர்சன், ஜொனதன் ட்ரொட் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோர் தலா ஒரு ஓட்டங்களைப் பெற்றனர். ஏனைய வீரர்கள் ஒரு ஓட்டத்தையும் பெறவில்லை.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அப்துர் ரஹ்மான் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவரின் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சுப் பெறுதியாகும். சயீட் அஜ்மல் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஹாபீஸ் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அப்துர் ரஹ்மான் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார். இத்தொடரின் 3 ஆவது போட்டி பெப்ரவரி 3 ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகவுள்ளது.


 

Views: 582

Comments   

 
0#meenavan2012-01-29 07:42
சுழல் பந்து, கிரிகெட்டின் விற்பன்னர்களை சுழட்டி தொடர் தோல்வியை ஏற்படுத்தி விட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தரவரிசையின் முதலாம் இடத்தை இழந்து விடுமா? வாழ்த்துக்கள் பாகிஸ்தான் மிஸ்பாஹ் அணி.
Reply
 
 
0#adhil ahamed2012-01-29 09:30
இலங்கை , இந்திய ஆகிய
அணிகள் படுதோல்வி அடைய நீங்களாவது ஆசியாவின் மானத்தை காத்தீர்களே!
Reply
 
 
0#ilyas2012-01-29 10:27
well done pakistan team. i proud of u r team. wish u all the best.
Reply
 
 
0#Ganesh2012-01-30 00:59
so our Sri lanka captain need to learn from this spin bowler very very important for tes.t but Dilshal lead with fast ball. i hope now Sri Lankan Team so happy and will show good performance also
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.