செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

ஒரே இரவில் கிரான்ட்ஸ்லாம் பட்டத்தையும் உலக முதலிடத்தையும் கைப்பற்றிய விக்டோரியா

 

அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ்  வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா சம்பியனாகியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவை 6, 6-0 விகிதத்தில் விக்டோரியா தோற்கடித்தார்.  22 வயதான விக்டோரியா அஸரென்கா கைப்பற்றிய முதலாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் இதுவாகும்.

இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 24 வயதான  மரியா ஷரபோவா இரண்டாமிடத்திலும் விக்டோரியா அஸரென்கா 3 ஆம் இடத்திலும் இருந்தனர். இப்போட்டியின் பின்னர் உலக தரவரிசையில் முதலிடத்திற்கும் விக்டோரியா முன்னேறியுள்ளார்.

'இது ஒரு கனவு நனவான விடயம். கிரான்ட்ஸ்லாம் சுற்றுப்போட்டியில் வெல்லும் கனவு கண்டதுடன் கடினமாக பாடுபட்டுவந்தேன். தரவரிசையிலும் முதலிடத்தைப் பெறுவது ஒரு போனஸ் ஆகும்'  என அவர் கூறினார்.

இந்த கிரான்ட்ஸ்லாம் போட்டிக்கு முன்னர் தொடர்ச்சியாக 11 சுற்றுப்போட்டிகளில் அஸரென்கா சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதற்குமுன் கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் எதிலும் அரையிறுதிக்கு மேல் முன்னேறியதில்லை. கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்க (207) பிரெஞ்சு (2008) சுற்றுப்போட்டிகளில் அவர் சம்பியனாகியிருந்தார்.

இன்று என்னைவிட அனைத்துவிடயங்களையும் அவர் சிறப்பாக செய்தார் என விக்டோரியாக குறித்து மரியா ஷரபோவா கூறினார்.

ஆண்கள் இரட்டையர்

இதேவேளை நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் லியாண்டர்  பயஸ்- செக்  குடியரசின் ரடெக் ஸ்டெபானெக் ஜோடி சம்பியனாகியது.

இவர்கள் நடப்புச் சம்பியனான அமெரிக்காவின் பொப் பிரையன் - மைக் பிரையன்  ஜோடியை  (7-6), (6-2) விகிதத்தில் தோற்கடித்தனர். 38 வயதான லியாண்டர் பயஸ் இதன் மூலம் 4 கிரான்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சம்பியாகியனாகிய வீரரானார்.

கலப்பு இரட்டையர்

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் ஹொரியா, டெகாவோ மற்றும் அமெரிக்காவின் பெதானீ மாடெக் சான்ட்ஸ் ஜோடி, ருமேனியாவின் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரஷ்யாவின் எலினா வெஸ்னியா ஜோடியை தோற்கடித்து சம்பியனாகியது.



 

Views: 391

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.