செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

முதலாவது இருபது20 போட்டியில் இந்தியாவை வென்றது அவுஸ்திரேலியா

 

இந்திய அணியுடனான முதலாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி  31  ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

சிட்னி நகரில் சற்றுமுன் நிறைவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களைக் குவித்தது.

மத்தியூ வாட் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பௌண்டரிகள் உட்பட 72 ஓட்டங்களைப் பெற்றார். டேவிட் ஹஸி 30 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில்  6 விக்கெட்இழப்பிற்கு 140  ஓட்டங்களையே பெற்றது.

அணித்தலைவர் டோனி 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.  அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில்  டேவிட் ஹஸி 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  டேனியல் கிறிஸ்டியன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



 

Views: 524

Comments   

 
0#ala2012-02-02 05:18
தொடர் கதை தான் போல உள்ளது
Reply
 
 
0#Ganesh2012-02-02 05:19
keeping continue excellent indian teams how they can lost all match? this is also one big talent? others can not do it like this score 1111111111111
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.