செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

மட்டு. சிசிலியா -வின்சன்ட் மகளிர் பாடசாலைகளின் இருபது 20 கிரிக்கெட்

(எம்.சுக்ரி,ஜிப்ரான்)

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலைக்கும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கும் இடையிலான பாடுமீன் சமர் எனப்படும் மென்பந்து கிரிக்கட் போட்டி மூன்றாவது வருடமாக இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

புனித சிசிலியா தேசிய பாடசாலை அணி நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி பவளக்காந்தன் உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் இதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இருபது ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் கடந்த வருட போட்டிகளில் தலா ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு பாடசாலைகளும் ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுக்கொண்டன.

Views: 145

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.