
(ரி.லோஹித், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் உயர்தர பாடசாலைக்கும் சிசிலியா பெண்கள் பாடசாலைக்கும் இடையில் இன்று நடைபெற்ற இருபது 20 வருடாந்த கிரிக்கெட் போட்டியில் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 3 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சிசிலியா அணி 19.4 ஓவர்களில் 106 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வின்சன்ற் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களையே பெற்றது.
இப் போட்டியின் சிறந்த ஆட்ட நாயகியாக புனித சிசிலியா பாடசாலையின் எஸ்.ஜே.விஜவதனி தெரிவு செய்யப்பட்டார்.
இவர் 23 ஓட்டங்களை பெற்றதுடன் 10 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.
சிறந்த பத்து வீச்சாளராக புனித சிசிலியா பாடசாலையின் எஸ்.ஜே. விஜிவதனியும், சிறந்த துடுப்பாட்ட வின்சன்ட் பாடசாலையின் சிந்துஜாவும் தெரிவு செய்யப்பட்டனர். சிந்துஜா 30 ஓட்டங்களை பெற்றார்.
சிறந்த களத்தடுப்பாளராக வின்சன்ற்; பாடசாலையின் மதுராணி தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய இப்போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.பி.போல் மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன், கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, விளையாட்டு உதவிக்கல்விப்பணிப்பாளர் லவகுமார், மண்முனை வடக்கு கோட்டக் கல்விப்பணிப்பாளர் டேவிட், புனித சிசிலியா பெண்கள் பாடசாலை அதிபர் விண்சன்ட் மகளிர் உயர் தர பாடசாலை அதிபர் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வராஜா மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் அதிபர் உட்பட பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முக்கியஸ்ததர்கள் கலந்து கொண்டனர்.
மூன்றாவது வருடமாக இன்று நடைபெற்ற போட்டியுடன் புனித சிசிலியா பாடசாலை இரண்டு தடவைகளும் வின்சன்ட் மகளிர் உயர் தர பாடசாலை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



.jpg)





Comments
ரஜீவ்
RSS feed for comments to this post