செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

141 ஓட்டங்களுடன் சுருண்டது இங்கிலாந்து; பாகிஸ்தான் மீண்டும் ஆதிக்கம்

பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துபாயில் நடைபெறும் இப்போட்டியில்  பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முதல்நாளான நேற்று இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று மேலும் 37 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவ்வணி எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

அன்ட்ரூ ஸ்ரௌஸ் 56 ஓட்டங்களையும் கெவின் பீட்டர்சன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில்  அப்துல் ரஹ்மான் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சயீட் அஜ்மல் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்  உமர்குல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்;த்தினர்.

பாகிஸ்தான்  அணி இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. 28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவ்வணியின் 2 ஆவது விக்கெட் வீழ்ந்தது.

எனினும் இங்கிலாந்து அணியின் மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்கவில்லை. 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த  அஸார் அலியும் யூனிஸ்கானும் இங்கிலாந்து பந்துவீச்சுகளை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்காக நேற்று மாலைவரை 194 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களைப் பெற்றார். இது டெஸ்ட் போட்டிகளில் யூனிஸ்கானின் 20 ஆவது சதமாகும். அதேவேளை, இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இத்தொடரில் எந்தவொரு வீரராலும் பெறப்பட்ட முதலாவது சதமுமாகும்.

இதேவேளை, அஸார் அலி ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இன்றைய ஆட்டமுடிவின்போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி 8 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 180 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.



 

Views: 156

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.