.jpg)
பாகிஸ்தான் அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 324 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 99 ஓட்டங்களையும் இங்கிலாந்து 141 ஓட்டங்களையும் பெற்றன. பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 365 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் 2 ஆவது நாளான நேற்று 115 ஓட்டங்களைப் பெற்றிருந்த யூனிஸ்கான் இன்று 127 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதேவேளை, அஸார் அலி 157 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரின் இரண்டாவது டெஸ்ட் சதமாகும்.
யூனிஸ்கானும் அஸார் அலியும் சதம் குவித்தாலும் வேறு எவரும் அரைச்தத்தையும் நெருங்கவில்லை. அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 31 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் மொன்டி பனேஸர் 124 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றி பெறுவதற்கு 324 ஓட்டங்கள் தேவையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டமுடிவின்போது விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வென்றால் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் முதலாவது வெள்ளையடிப்பாக அது அமையும்.
2007 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிடம் 5-0 விகிதத்தில் தோல்வியுற்ற பின்னர் இங்கிலாந்து 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிலும் இங்கிலாந்து அணி வெள்ளையடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)



Comments
RSS feed for comments to this post