செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

130 ஓட்டங்களுடன் சுருண்டது பாகிஸ்தான்; முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

 

 

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்போட்டியில் இங்கிலாந்து அணி 130 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நேற்று அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் அலஸ்டயர் குக் 137 ஓட்டங்களைக் குவித்தார். ரவி போப்பரா 50 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சயீட் அஜ்மல் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையில் அரைவாசியையே பெற்றது. 35 ஓவர்களில் 130 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான் அணி. அவ்வணியின் சார்பில் அதிகபட்சமாக சஹீட் அவ்ரிடி 28 ஓட்டங்களைப்பெற்றார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில்  ஸ்டீவன் பின் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சமிட் பட்டேல் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 3-0 விகிதத்தில் தோல்வியைத் தழுவியபின் முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி நாளை புதன்கிழமை அபுதாபியில் நடைபெறவுள்ளது.

Views: 204

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.