அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக ரிக்கி பொன்டிங் மீண்டும் கடமையாற்றவுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதனால் இப்போட்டிக்கான அவுஸ்திரேலிய அணிக்கு ரிக்கி பொன்டிங் கடமையாற்றவுள்ளார்.
எனினும் எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இந்திய அணியுனான போட்டியின்போது மீண்டும் மைக்கல் கிளார்க் அணிக்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிக்கி பொன்டிங் தலைமையில் அவுஸ்திரேலிய அணி 162 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வெற்றியீட்டியிருந்தது. கடந்த உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் அவர் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

