அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இலங்கை அணியுடனான போட்டியில் இந்திய அணிக்கு 237 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட் நகரில் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தினேஸ் சந்திமால் 91 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பெற்றார். மஹேல ஜயவர்தன 43 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீசசாளர்களில் வினய் குமார் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


