அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. முக்கோண கிண்ண கிரிக்கெட்த் தொடரில் இன்று நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 236 ஓட்டங்களையே பெற்றது.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. எனினும் அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரமே இந்திய அணி பெற்றது.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சமநிலையில் முடிந்த 26 ஆவது போட்டி இதுவாகும்.


Comments
இலங்கை அணி 30வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசியதாகவும் நடுவர் ஐந்து பந்துகளுடன் ஓவர் முடிவுட்டதாக அறிவித்ததாகவும் ஊர் தகவல் உலா வருகின்றது.
இது உண்மையா ??????
RSS feed for comments to this post