சி.பீ. கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 41 ஓவர்களில் 152 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெறும் இப்போட்டி மழை காரணமாக தலா 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 158 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வேர்த் - லூயிஸ் விதிகளின்படி இலங்கை அணிக்கு 41 ஓவர்களில் 152 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்ட்டது.
அவுஸ்திரேலியஅணியில் டேவிட் ஹஸி 58 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கைப் பந்துவீச்சாளர்களில் பர்வீஸ் மஹ்ரூவ் சிறப்பாக பந்துவீசி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். திசேர பெரேரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


Comments
RSS feed for comments to this post