செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இந்திய அணியை 110 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா

சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 110 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்றது.

மைக்கல் ஹஸி 52 பந்துகளில் 59 ஓட்டங்களையும் பீட்டர்பொரெஸ்ட் 52 ஓட்டங்களையும் வீழ்த்தினர். இர்பான் பதான் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  43.3 ஓவர்ளகில் 178ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது,

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் டோனி மாத்திரம் அரைச் சதம் (59) பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களைப் பெற்றார். முன்வரிசை வீரர்களான கௌதம் காம்பீர் (5), சச்சின் டெண்டுல்கர் (3),  வீரட் கோலி (12) ரோஹித் சர்மா (0) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹாஸ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Views: 297

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.