
தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் லெவி இருபது 20 போட்டியில் அதிவேக சதம் குவித்து சாதனை படைத்துள்ளார்.
நியூஸிலாந்தின் ஹமில்டன் நகரில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் அவர் 45 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இவற்றில் 12 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளும் அடங்கும். இப்போட்டியில் அவர் மொத்தமாக 51 பந்துகளில் 13 சிக்ஸர்கள் உட்பட 117 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
24 வயதான ரிச்சர்ட் லெவி, விளையாடிய இரண்டாவது சர்வதேச போட்டி இதுவாகும். இத்தொடரின் முதலாவது இருபது 20 போட்டியில் பங்குபற்றிய அவர் 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இன்று நடைபெற்ற போட்டியில் லெவியின் அதிரடி துடுப்பாட்டம் மூலம் நியூஸிலந்து அணியை தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுகளால் வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.




Comments
RSS feed for comments to this post