
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெறும் இப்போட்டியில் லாஹிரு திரிமான்ன 62 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். திலகரட்ன தில்ஷான் 51 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்திவ்ஸ் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 ஓடடங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இர்பான் பதான் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
.jpg)
.jpg)
.jpg)


Comments
RSS feed for comments to this post