.
வியாழக்கிழமை, 02 ஒக்டோபர் 2014

ரொனால்டோவின் சாதனையை சமப்படுத்தினார் மெஸ்ஸி

இப்பருவகாலத்திற்கான ஸ்பெய்னின் லா லிகா தொடருக்கான 41 கோல்கள் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனயை லியனொல் மெஸ்ஸி சமப்படுத்தியுள்ளார்.

பார்சிலோனா அணிக்காக நேற்றைய தினம் இரண்டு கோல்களைப் பெற்ற போதே அவர் இச்சாதனயை சமப்படுத்தினார்.

லெவன்ரே அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் அவர் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம் இச்சாதனயைச் சமப்படுத்தினார்.

லெவென்ரே அணிக்கும் பார்சிலோனா அணிக்குமிடையில் இடம்பெற்ற இப்போட்டியில் லெவென்ரே அணி முதலாவது கோலை 23ஆவது நிமிடத்தில் போட்டு இடைவேளை வரை ஆதிக்கம் செலுத்தியது.

எனினும் 64ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் போட்ட லியனொல் மெஸ்ஸிஇ 72ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி உதையொன்றைக் கோலாக்கி போட்டியை அணிக்காகப் பெற்றுக் கொடுத்ததுடன்இ சாதனயையும் சமப்படுத்தினார்.
 
முன்னதாக ரியல் மட்ரிட் மற்றும் ஸ்போர்ட்டிங் ஜியோன் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் ரியல் மட்ரிட் கழகம் 3-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றிருந்தது.

முதலாவது கோலை ஸ்போர்ட்டிங் ஜியோன் கழகம் போட்ட போதிலும்இ 37ஆவது, 74ஆவது மற்றும் 82 ஆவது நிமிடங்களில் கோல்களைப் போட்டி ரியல் மட்ரிட் கழகம் 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலொன்றைப் போட்டு தனது கோல் கணக்கை 41 கோல்களாக உயர்த்தினார். (க்ரிஷ்)
Views: 702

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.