.jpg)
(கிரிசன்)
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மாவட்டங்களுக்கு இடையில் பெண்களுக்கான ஊர்சுற்றும் போட்டி முல்லைத்தீவில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான பெண்களுக்கான 08 கிலோமீற்றர் தூரத்திற்கான ஊர்சுற்றும் போட்டியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் ஆரம்பித்து வைத்தார்.
முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்று முதல் ஆறு இடங்களைப் பெற்ற வீராங்கனைகளின் விபரம் வருமாறு:-
முதலாம் இடம் - எஸ்.கேமா (முல்லைத்தீவு 35:03:5 செக்கன்)
இரண்டாம் இடம் - ஆர்.சாலினி (வவுனியா)
மூன்றாம் இடம் - எஸ்.சஞ்சிகா (வவுனியா)
நான்காம் இடம் - ஜே.மரியகொறற்றி (யாழ்ப்பாணம்)
ஐந்தாம் இடம் - எம்.வினாகினி (வவுனியா)
ஆறாம் இடம் - என்.சுமதி (யாழ்ப்பாணம்)

