உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
நாணயச் சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார வென்றார். அதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அவர் அறிவித்தார்.
இப்போட்டியில் இரு தடவைகள் நாணயம் சுழற்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதல்தடவை நாணயம் சுழற்றப்பட்டபோது குமார் சங்கக்கார தான் கேட்டது பூவா தலையா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இரண்டாவதுதடவையாகவும் நாணயம் சுழற்றப்பட்டது.

