உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
மஹேல ஜயவர்தன 88 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 275 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.
மும்பை வாங்கடே அரங்கில் நடைபெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
உபுல் தரங்க 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். திலகரட்ன தில்ஷான் பந்துகளில் 33 ஓட்டங்களையும் அணித்தலைவர் குமார் சங்கக்கார பந்துகளில் ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் திலான் சமரவீர 21 ஓட்டங்களுடனும் திலகரட்ன தில்ஷான் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி நெருக்கடிக்குள்ளானது. 40 ஆவது ஓவரில் 32 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சாமர கப்புகெதர ஆட்டமிழந்தபோது இலங்கை அணி 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
எனினும் அதன்பின் இலங்கை வீரர்கள் ஓட்ட வேகத்தை அதிகரித்தனர். நுவன் குலசேகர 30 பந்துகளில் 32 ஓட்டங்களைப்பெற்றார்.
திசேர பெரேரா 9 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார். மஹேல ஜயவர்தன 88 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றது. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மஹேலவின் 13 ஆவது சதம் இதுவாகும். உலகக்கிண்ணப் போட்டிகளில் இது அவரின் 3 ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது..

