Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 23 மே 2013

திசைமாறிய காதல் பயணம்

எதிரெதிர்த்திசைகளுடே
நீயும் நானும் தூரமாய் வெகுதூரமாய்
பிரிந்துவிட்ட நேரத்தில்
வலுத்துப்பெய்த மழைபற்றி
நமக்கெந்த அக்கறையும் இருக்கவில்லை.

உன் நிழல் பார்த்துத்தொடர்ந்த
என் வாலிபப் பயணங்களின் மெல்லிய இழையை
காலத்தின் கூர்வாள் சடுதியாக கிழித்தபோது
திகைப்பையும் கண்ணீரையும் தவிர
வேறென்ன செய்தோம் நாம்?

அதோ நீ செல்லும் பாதை இருள் சூழ்ந்தது
இதோ நான் செல்லும் பாதை முள் நிறைந்தது

நமக்கே தெரியாத பயணமொன்றின்
நிர்ப்பந்தத்தில் அவசர அவசரமாக
நகர்ந்து கொண்டிருக்கும் கணப்பொழுதில்
எப்போதாவது நினைத்துப்பார்..
என் கைகோத்தபடி நாம் நடந்த
பயணங்களின் ரம்யத்தையும்..நிம்மதியையும்..?


கவிதையாக்கம்:- நிந்தவூர் ஷிப்லி
ஓவியம்: நிர்மலவாசன்


 
                                                                       
Views: 1422

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.