குரு பெயர்ச்சி பலன்கள் - 08.05.2011
07-05-2011 08:20 PM
Comments - 0       Views - 11808

குரு பெயர்ச்சி சித்திரை 25ஆம் திகதி (08.05.2011) இரவு 1.30 மணியளவில் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. திருகணிதப்படி பகல் 2.30 மணிக்கும் வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 1.30 மணிக்கும் பெயர்ச்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய:
இதுவரை 12இல் விரய ஸ்தானத்தில் இருந்த குரு இப்பொழுது ஜென்ம ராசிக்கே வருகிறார். மனைவியின் உடல்நிலை பாதிக்கும். சிலருக்கு பாக பிரிவினை உண்டாகும். வெளியூர் வேலை அல்லது குடும்பத்தில் சுபகாரியம் உண்டாகும். புதிய தொழிலில் முதலீடு செய்யலாம். ஜென்ம குரு- மேட ராசிக்கு 5, 6, 7ஆம் இடத்தில் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும், கனவுகள் நினைவாகும், நினைத்த காரியம் நடைபெறும், திருமணத்தடை நீங்கும். பெருமை, புகழ் உண்டாகும், பாராட்டுகள் கிடைக்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்கிரம் அடைவதால் பார்த்த இடம் எல்லாம் புகழ் உண்டாகும். அதியோகமான புகழ் உண்டாகும். சில நேரத்தில் காரியங்கள் தடை, தாமதம் குழப்பங்கள் ஏற்படலாம். அந்த காலகட்டத்தில் குரு ப்ரீதியாக தட்சணமூர்த்தி ஸ்லோகம் பாராயணம் செய்யலாம், குரு கோவிலுக்கு செல்லலாம்.

அஸ்வினி நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி வாக்கு, தனம், குடும்பம், வித்தை முதலிய யோகங்களை செய்யும், குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.

பரணி நட்சத்திரம்:
குடும்பத்தில் பொறுப்பு, பொறுமை, செல்வாக்கு உண்டாகும். மற்றவர் பாராட்டும் அளவு உங்கள் செயல் சிறக்கும்.

கிருத்திகை நட்சத்திரம்:
இந்த குரு பெயர்ச்சி தேக ஆரோக்கியம், சௌபாக்கியம், சத்ருஜெயம் ஏற்படுத்தும். எண்ணங்கள் ஈடேறும்.

பரிகாரம்:
தட்சணாமூர்த்தி கோவில் சென்று வியாழக்கிழமை அபிஷேகம் செய்யவும்.

கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம் 2ஆம் பாதம் முடிய:
இதுவரை 11இல் வெற்றி ஸ்தானத்தில் இருந்த குரு 12இல் விரய ஸ்தானத்திற்கு செல்கின்றார். இதனால் இந்த குரு பெயர்ச்சி இடப ராசிகாரர்களுக்கு சோதனையும் வேதனையும் ஏற்படுத்தும். உத்தியோகத்தில் 4, 6, 8ஆம் இடத்தில் பார்ப்பதால் வெற்றியும் இலாபமும் கிடைக்கும். சிலரை லட்சாதிபதி ஆக்கும். போட்டி, பொறாமை மனகஷ்டம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கனவுகள் நினைவாகும், நினைத்த காரியம் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு நேகர்த்தி அடைவதால் சந்தோஷம், மகிழ்ச்சி அடைபவர்கள் பாதிப்பும் அடையலாம். பார்த்த இடம் எல்லாம் புகழ் உண்டாகும். அதியோகமான புகழ் உண்டாகும், சில நேரத்தில் காரியங்கள் தடை, தாமதம், குழப்பங்கள் ஏற்படலாம். அந்த காலகட்டத்தில் குரு ப்ரீதியாக தட்சணாமூர்த்தி ஸ்லோகம் பாராயணம் செய்யலாம், குரு கோவிலுக்கு செல்லாம்.

கிருத்திகை நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சியில் பூமி, வீடு, வாகனம் போன்றவை வாங்குவீர்கள். சுப கடன்களை தந்து மங்கல செலவுகளை தரும்.

ரோகிணி  நட்சத்திரம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன உறுதி கிடைக்கும். நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி எதிரி, போட்டிகள், விவகாரம், விரயங்களை சந்திக்க செய்யும்.

பரிகாரம்:
கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவப் பிரம்மேந்திரரை சரணடைந்தால் விமோசனம் கிடைக்கும்.

மிருகசீரிடம் 3ஆம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய:
இதுவரை 10இல் இருந்து பாடாய் படுத்திய குரு 11ஆம் இடம் இலாப ஸ்தானத்திற்கு செல்கின்றார். பதவி, தொழிலில் பாதிப்பை சந்தித்தவருக்கு இந்த குரு பெயர்ச்சி ஆறுதலையும் மாறுதலையும் ஏற்படுத்தும். 4, 6, 8ஆம் இடத்தில் குரு பார்ப்பதால் வெற்றியும் இலாபமும் கிடைக்கும். சிலரை லட்சாதிபதி ஆக்கும். போட்டி, பொறாமை, மனகஷ்டம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கனவுகள் நினைவாகும், நினைத்த காரியம் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குருசந்தோஷம், மகிழ்ச்சி அடைபவர்கள் புகழ் உண்டாகும்;. சில நேரத்தில் காரியங்கள் தடையின்றி நடைபெறும். வியாபாரத்தில் இலாபம் அதிகப்படியாக கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி சுபமங்கல செலவுகளை தரும். எதிரி, போட்டி வகையில் விவகாரங்களையும் சந்திக்கும்.

திருவாதிரை நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி மனைவி வகையில் சிலருக்கு யோகத்தையும்; சிலருக்கு பாதகத்தையும் செய்யும். உபதொழில் ஆரம்பிக்கலாம்.

புனர்பூசம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி கடன் நிவர்த்தி, சத்ருஜயம், வெற்றியையும் தரும்.

பரிகாரம்:
சிவன் கோவில் உள்ள தட்சணாமூர்த்தியை வழிப்பட வேண்டும்.
புனர்பூசம் 4ஆம் பாதம் முதல் பூசம் ஆயில்யம் முடிய:
இதுவரை கடக ராசிக்கு 9இல் ஆட்சி பெற்ற குரு 10ஆம் இடம் செல்கின்றார். பண புழக்கம் அதிகமாக இருக்கும், இடம், பூமி, வீடு, வாகனம் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும். பதவி, தொழில் நன்றாக நடக்கும். வெற்றியும் இலாபமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். நினைத்த காரியம் நடைபெறும். திருமணத்தடை நீங்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்கிரத்தில் உக்ரபலன் என்பது நற்பலன்களை அடையும். வியாபாரம் தடையின்றி நடைபெறும். சில காலம் வியாபாரம் மந்த நிலை ஏற்படும். திருமணம் தடைப்படும். கல்வியில் மந்த நிலை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி கடனையும் போட்டி பொறாமையையும் எதிரிகளையும் சந்தித்து போராடி ஜெயிக்கும்.

பூசம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி மனைவி வகையில் பிரச்சினைகளை உண்டாக்கினாலும் கடைசியில் அதை வென்று சந்தோஷம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி சுப செலவுகளையும் தைரியத்தையும் தொழில் யோகத்தையும் உண்டாகும். சிலருக்கு கடன் யோகம் உண்டானாலும் அது சுப கடன் ஆகும்.

பரிகாரம்:
சிவன் கோவிலில் உள்ள அட்டமாசித்தி தட்சணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிப்பட  வேண்டும்.
பூசம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய:
இதுவரை சிம்ம ராசிக்கு 8இல் ஆட்சி பெற்ற குரு 9ஆம் இடம் செல்கின்றார். நீங்கள் அனுபவித்த வேதனைகள், சோதனைகள் அதிகமாக இருக்கும். மதிப்பு, மரியாதை, கௌரவம், கீர்த்தி கீழே தள்ளப்படும். போட்டிகள் பொறாமைகள் அதிகமாக இருக்கும். கடன் அதிகரிக்கும். ஏழரை சனி முடியும் காலம் இதனால் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும் காலம். ஆசைகள் நிறைவேறி அதிர்ஷ்டம் தரும். பூமி, வீடு, வாகனம் யோகம் கிடைக்கும். பதவி, தொழில் நன்றாக நடக்கும்;. இலாபமும் கிடைக்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ர காலம் மிக யோகமாக அமையும்.

மகம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி புதிய சரித்திரம் படைக்கும் அளவிற்கு சாதனை புரிய வைத்து ஜன செல்வாக்கை தரும்.

பூரம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி தாழ்வை அகற்றி வாழ்வை தரும். துன்பத்தை நீங்கி இன்பத்தை தரும்.

உத்திரம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவத்தை தரும்.

பரிகாரம்:
சுப்பிரமணிய சுவாமிகளையும் சுயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வரவும். தட்சணாமூர்த்தி சந்நிதிக்கும் அபிஷேகம் செய்து வரவும்.

உத்திரம் 2ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய:
இதுவரை நல்ல இடமான 7இல் இருந்த குரு 8ஆம் இடம் செல்கின்றார். அத்துடன் சனியும் ஜென்மத்தில் நிற்கின்றார். எல்லாமே எதிர்மறையாக விளங்கும் 8இல் குரு என்பது விபத்து, கண்டம், அபகீர்த்தி, அவமானம், சஞ்சலம் ஆகிய பலன்களை குறிக்கும் இடம். சுப கிரகம் கெட்ட இடத்தில் வந்தால் அதன் கேடு அதிகரிக்கும். குரு இயற்கை சுப கிரகம் என்பதால் தட்டி கொடுத்து ஊக்கப்படுத்துவார்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ர கதியில் சஞ்சாரம் பண்ணும் காலம் 8ஆம் இடத்து பலன் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி தவிர்க்க முடியாத செலவுகளையும் விரயங்களையும் இடமாற்றங்களையும் ஏற்படுத்தும்.

அஸ்தம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி இலாபத்தையும் வெற்றியையும் மேம்படுத்தும்.

சித்திரை நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி சஞ்சலம், கவலை, ஏமாற்றம் இவற்றை கொடுத்தாலும் மன தைரியத்தை கெடுக்கும்.

பரிகாரம்:
திருச்செந்தூரில் தட்சணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. இங்கு சனிபகவானும் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார். அங்கு சென்று வழிப்பட்டால் குருவின் அருள் கிடைக்கும்.
சித்திரை 3ஆம் பாதம்; முதல் சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய:
துலா ராசிக்கு இதுவரை கெட்ட இடமான 6இல் ஆட்சி பெற்ற குரு- 7ஆம் இடம் செல்கின்றார். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, தைரியம் உண்டாகும். கௌரவம், மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உண்டாகும். அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும் காலம். ஆசைகள் நிறைவேறி அதிர்ஷ்டம் தரும். பூமி, வீடு, வாகனம் யோகம் கிடைக்கும். பதவி, தொழில் நன்றாக நடக்கும்;. இலாபமும் கிடைக்கும். பெருமை அதிகரிக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடைபெறும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ர காலம் மிக யோகமாக அமையும்.

சித்திரை நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி குடும்பத்தில் மகிழ்சியும் நல்ல வருமானத்தையும் திருமண யோகத்தையும் தரும்.

சுவாதி நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி தேக ஆரோக்கியம், கடன்கள் நிவர்த்தி, தொழில் மேன்மை அடைய செய்யும்.

விசாகம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி புதிய சுபகடன்களை கொடுக்கும். தைரியத்தை உருவாக்கும், குடும்ப ஓற்றுமையை ஏற்படுத்தும்.

பரிகாரம்:
சிவன் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தியை வழிபடவும்.

விசாகம் 4ஆம் பாதம்; முதல் அனுஷம், கேட்டை முடிய:
இதுவரை நல்ல இடமான 5இல் இருந்த குரு 6ஆம் இடம் செல்கின்றார். சத்ரு ரோகம், கடன் ஸ்தானத்தில் வந்திருக்கும் குரு- சுப கிரகம் என்பதால் கெட்ட இடத்தின் பலனையும் கூட்டி தருவார். நோய், கடன் சத்ரு அதிகமாகும். போட்டி, பொறாமை, சங்கடங்கள் அதிகமாகும். 10, 12, 2ஆம் இடத்தை பார்கின்ற குரு நின்ற இடத்தை விட பார்த்த இடத்திற்கு பலன் அதிகம். தொழில் மேன்மை, யோகம், லாபம் போன்றவை ஏற்படும். 11ஆம் இடத்தில் உள்ள சனி வெற்றி பாதையை கொடுக்கும். பணபுழக்கம் ஏற்படும். பணபஞ்சம் இருக்காது.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ர காலம். தசா புத்தி பாதகமாக இருந்தால் 6, 12ஆம் இடம் பலமாக அமையும்.

விசாகம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி கடன் அதிகமாக இருந்தாலும் பணபுழக்கம் அதிகரிக்கும். கையில் பணம் அதிகமாக இருக்கும். எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம்.

அனுஷம் நட்சத்திரம்:

இந்த குருபெயர்ச்சி வெற்றியையும் தேடி தரும், லாபம் பெருகும், ஆரோக்கியம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி திருமணம், மகப்பேறு, பூமி, வாகனம், வீடு யோகம் தரும்.

பரிகாரம்:
சிவன் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தியை வழிபடவும்.

மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய:
தனுசு ராசிக்கு 4இல் ஆட்சி பெற்ற குரு 5ஆம் இடம் செல்கின்றார். குருவுக்கு 2, 5, 7, 9, 11ஆம் இடங்கள் யோகமான அதிர்ஷ்டமான இடங்கள். கௌரவம், மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உண்டாகும். மக்கள் பேறு, மகிழ்ச்சி, வேலை, சகலசம்பத்து, அஷ்ட லட்சுமி கடாட்சம், செல்வ பாக்கியம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு, தாய் மாமன் சொத்து, பட்டனார் சொத்து, கிடைக்கும். நீண்ட கால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறும். அதிர்ஷ்டமும் யோகமும் தோடி வரும். வீடு, வாகனம் யோகம் கிடைக்கும். தொழில் நன்றாக நடக்கும்,; இலாபமும் கிடைக்கும். பெருமை அதிகரிக்கும். முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரமாக பார்ப்பார். நல்ல இடத்தில் இருக்கும் குரு நல்ல இடத்தை பார்த்தால் நல்லதாக நடக்கும்.

மூலம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சியில் தொழில் மேன்மை, பதவி உயர்வு, வாழ்க்கை வளம், தேக நலம், கடன் நிவர்த்தி ஆகியவை உண்டாகும்.

பூராடம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி நோய் நிவர்த்தி, பூரண ஆரோக்கியம், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி, மங்கல காரியங்கள் இவற்றால் மகிழ்ச்சி ஏற்படுத்தும்.

உத்திராடம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி வாழ்க்கையில் முன்னேற்றம், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி, மங்கல காரியங்கள் இவற்றால் மகிழ்ச்சி ஏற்படுத்தும்.

பரிகாரம்:
மும்மூர்த்திகளில் ஒருவர் தத்தாத்ரேயர். இவரும் குரு தான், இவரை வழிபடவும்.

உத்திராடம் 2ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய:
இதுவரை மகர ராசிக்கு 3இல் ஆட்சி பெற்ற குரு 4ஆம் இடத்திற்கு மாறியுள்ளார். ஏற்கனவே குரு இருந்த இடம் சரியில்லை. வெளிநாடு சென்றவர்கள் வீடு திரும்புவார்கள், புதிய தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். பணகஷ்டமும் மனகஷ்டமும் ஏற்படும். திருமண தடை ஏற்படும். கல்வியில் மந்தநிலை உருவாகும். உடல்நிலை பாதிக்கப்படும். 12இல் சனி 4இல் அமர்ந்து குரு 10ஆம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் பதவி, வேலை மறுமலர்ச்சி பெறும். வெற்றி கிடைக்கும், முயற்சிகள் ஜெயமாகும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரகதியில் தாச புக்தி பாதகமாக இருந்தால் கடினமான முயற்சியால் நன்மைகள் தந்து வளம் நலம் ஆக்கிவிடும்.

உத்திராடம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி சிறப்பாக அமையாது.

திருவோணம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி எல்லா வகையிலும் நன்மை தரும். திருமண தடை விலகும், வாரிசு யோகம் உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி தொழில் யோகத்தையும் பணயோகத்தை கொடுத்தாலும் தயக்கத்தை தரும்.

பரிகாரம்:
தட்சணாமூர்த்தியை வழிபடவும்.

அவிட்டம் 3ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய:
இதுவரை கும்ப ராசிக்கு 2இல் ஆட்சி பெற்ற குரு 3ஆம் இடத்திற்கு மாறியுள்ளார். 2ஆம் இடத்தை விட 3ஆம் இடம் மோசமான இடம். வெளிநாடு செல்ல தடை, புதிய தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். பணகஷ்டம் ஏற்படும். திருமண தடை ஏற்படும். புதிய தொழில் தொடங்க வேண்டாம். உடல்நிலை பாதிக்கப்படும். பதவி பறிபோகும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரமாக பார்ப்பார். நல்ல இடத்தில் இருக்கும் குரு நல்ல இடத்தை பார்த்தால் நல்லதாக நடக்கும்.

அவிட்டம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி வேலை, வருமானம் இல்லாமல் தடுமாறியவர்களுக்கு தொழில், சம்பாத்தியம் ஏற்படும்.

சதயம் நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி 10ஆம் இடத்தில் ராகு, குரு உங்களுக்கு இனிமையான எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவார்கள்.

பூரட்டாதி நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி தனலாபத்தையும் சகோதர, நண்பர்கள் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்:
வடகுரு பகவானையும் சனீஸ்வரரையும் வழிபடவும்.

பூரட்டாதி 4ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய:
இதுவரை ஜென்ம குரு 2இல் செல்கின்றார். குருவுக்கு 2, 5, 7, 9, 11ஆம் இடங்கள் யோகமான அதிர்ஷ்டமான இடங்கள். கௌரவம், மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உண்டாகும். மக்கள் பேறு மகிழ்ச்சி, வேலை, சகலசம்பத்து, அஷ்ட லட்சுமி கடாட்சம், செல்வ பாக்கியம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு, தாய்மாமன் சொத்து, பட்டனார் சொத்து, கிடைக்கும். நீண்ட கால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறும். அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும். வீடு, வாகனம் யோகம் கிடைக்கும். தொழில் நன்றாக நடக்கும். இலாபமும் கிடைக்கும். பெருமை அதிகரிக்கும். முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.

07.09.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரம் நல்லதாக நடக்கும்.

பூரட்டாதி நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி வாக்கு, தனம், குடும்பத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும். தொழில், பதவி உயர்வு, மேன்மை, சுபமங்கல விரயங்களை ஏற்படுத்தும்.

உத்திரட்டாதி நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி இலாபத்தை தந்து நல்ல காரியத்துக்கு செலவுகளை ஏற்படுத்தும். பூமி, வீடு, வாகனம் போன்ற சுப செலவு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரம்:
இந்த குருபெயர்ச்சி தேக ஆரோக்கியத்தை தந்து இல்லறத்தில் நலமாக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்:
தஞ்சாவூர் அருகில் தென்குடித்திட்டையில் குரு பகவான் தனி சந்நிதி இருக்கிறது. அங்கு சென்று வழிபடவும்.

"குரு பெயர்ச்சி பலன்கள் - 08.05.2011" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty