சனி பெயர்ச்சி பலன்கள் - 2011
20-12-2011 05:00 PM
Comments - 9       Views - 14303

 

 

வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு கர வருடம் மார்கழி மாதம் 5ஆம் திகதி (21.12.2011) புதன்கிழமை அன்று காலை 7.24 மணிக்கு மாறுதலாகி செல்கின்றார். 16.12.2014 வரை சனி பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் உடையோருக்கு இன்றுமுதல்  சனி பகவான் உங்கள் ராசிக்கு 10, 11இற்கு அதிபதி 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் புதிய கடன் உருவாகும். ஜென்ம ராசிக்கு 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி 3ஆம் பார்வையாக உள்ள 9ஆம் வீட்டையும் 7ஆம் பார்வையாக உள்ள ஜென்ம ராசியை பார்வை செய்வதும் 10ஆம் பார்வையாக 4ஆம் வீட்டை பார்வை செய்வதும் நன்மை, தீமை கலந்த பலனை உண்டாக்கும்.

உடல் ஆரோக்கியம் : உங்கள் உடல் நலம் சிறிது பாதிக்கும். சிறு சிறு மருத்துவ செலவுக்கு பின் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வேண்டும்.

கொடுக்கல் - வாங்கல் : கொடுக்கல் - வாங்கலில் சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும். வம்பு வழக்குகளில் இருந்து சற்றே விடுபடுவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு தாமதித்து அமையும்.

தொழில், வியாபாரம் : வேலையாட்களின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்காது. வியாபாரம் மந்தமாகவே நடைபெறும் புதிய முயற்சிகளை தவிர்ப்பதும் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பதும் நன்மையை தரும்.

பெண்களுக்கு : உடல் நலம் சிறிது பாதிக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. கணவன் - மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும்.

மாணவ – மாணவியருக்கு : கல்வியில் ஆர்வம் குறையும். கடினமான உழைப்பினை மேற்கொண்டால் ஓரளவு சாதகமான பலனை அடைய முடியும்.

நட்சத்திர பலன்கள்

அஸ்வினி : நீங்கள் எதிலும் நிதானமாக செயற்பட்டால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். கடன் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுப்பதில் கவனம் தேவை. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாரான பலனை தரும்.

பரணி : உடல் நலம் சுமாராகவே காணப்படும். பொருளாதாரத்தில் சிறு சிறு தடை, தாமதத்திற்கு பிறகு பணவரவுகள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே  ஒற்றுமை குறையும்.

கிருத்திகை 1ஆம் பாதம் : குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே சிறிது  ஒற்றுமை குறைவு ஏற்படும், வரவுக்கு தகுந்த செலவு ஏற்படுவதால் சேமிக்க இயாலாது. திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சி தாமதப்படும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 9, 18, 27
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய்
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : முருகன்


பரிகாரம் : சனி பகவானை வழிபாடு செய்வதும், சனி வார விரதம் இருப்பதும் நல்ல பலனை தரும்.
21.12.2011 முதல் 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு அற்புதமான பலன்களை எல்லாம் கொடுப்பார். தொடர்ந்து வெற்றி குவியும். 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3ஆம் பார்வையாக உள்ள 8ஆம் வீட்டையும் 7ஆம் பார்வையாக 12ஆம் வீட்டையும் 6ஆம் பார்வையாக ஜென்ம ராசிக்கு 3ஆம் வீட்டையும் பார்வை செய்கின்றார். இதனால் உங்கள் வாழ்வில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். நல்ல ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். வளமான வாழ்வு அமையும்.

உடல் ஆரோக்கியம் : உங்கள் உடலில் பலமும் வலிமையும் கூடும். எதிரிகள் பலம் குறைந்து நட்பாக மாறுவார்கள். பிள்ளைகளால் நல்ல அனுகூலப்பலனும் சுபிட்ஷமும் உண்டாகும். மருத்துவ செலவு குறையும். 

கொடுக்கல், வாங்கல் : பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வம்பு வழக்குகள் வெற்றியை தரும். சிலருக்கு வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும்.

தொழில், வியாபாரம் : வேலையாட்களின் பொருள் வரவு திருப்தியாக காணப்படும். இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு : உடல் நலம் சீராக இருக்கும். கணவன் - மனைவி ஒற்றுமை இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் ஏற்படும்.

மாணவ – மாணவியருக்கு : கல்வியில் ஆர்வம் உண்டாகும். பெற்றோர் மற்றும்  ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

நட்சத்திர பலன்கள்

கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம் : உங்கள் தேக பலம் நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் தனம், பொருள் சேர்க்கை நன்றாக அமையும். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடுக்கும் காரியம் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

ரோகிணி : தேக ஆரோக்கியம் உண்டாகும். தேக பலம் நன்றாகவே இருக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் உண்டாகும். வியாபாரம் நன்றாக நடைபெறும். பொருளாதாரத்தில் சிறு சிறு தடை ஏற்படும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.

மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம் : குடும்பத்தில் புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தொழில் ரீதியாக தூர பயணங்கள் அமையப்பெறும். கணவன் - மனைவி இடையே  ஒற்றுமை ஏற்படும். குடும்ப வாழ்வில் சந்தோஷம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 5, 6, 14, 23, 24
அதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம் : லட்சுமி


பரிகாரம் : சனி பகவானை திருநள்ளாறு சென்று வழிபட்டு வர நல்ல பலனை தரும்.
21.12.2011 முதல் 4ஆம் வீட்டில் சஞ்சரித்த சனி பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். இதனால் கடந்த கால சோதனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். சனி பகவான் உங்களுக்கு அற்புதமான பலன்களை எல்லாம் கொடுப்பார். தொடர்ந்து வெற்றி குவியும். 6ம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3ஆம் பார்வையாக உள்ள 8ஆம் வீட்டையும் 7ஆம் பார்வையாக 12ஆம் வீட்டையும் 6ஆம் பார்வையாக ஜென்ம ராசிக்கு 3ஆம் வீட்டையும் பார்வை செய்கின்றார். இதனால் உங்கள் வாழ்வில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். நல்ல ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி ஏற்படும், வளமான வாழ்வு அமையும்.

உடல் ஆரோக்கியம் : உங்கள் தேக ஆரோக்கியம் மிகவும் சிறப்புடன் அமையும். பலமும் வலிமையும் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படும் அமைப்பும் மனதில் உற்சாகமும் ஏற்படும்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்களில் மிகவும் சிறப்புடன் செயல்படுவீர்கள். சரளமான நிலையும் தாராளமான பணவரவுகளும் உண்டாகும்.

தொழில், வியாபாரம் : தொழில், வியாபார நிலை மிகவும் அற்புதமாக அமையும். புதிய தொழில் தொடங்குவது, நவீன உபகரணங்கள் வாங்கி உபயோகிப்பதில் லாபம் அதிகம் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு : உத்தியோகத்தில் திறமை வெளிப்படுத்துவதும் பதவி உயர்வு, ஊதிய உயர், கௌரவ பதவிகள் யாவும் உண்டாகும்.

பெண்களுக்கு : உடல் நலம் நன்றாக அமையும். மருத்துவசெலவு விலகும். தடைபெற்ற திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் அமையும். கணவன் - மனைவி அன்யோன்யம் பலப்படும்.

மாணவ – மாணவியருக்கு : கல்வி, விளையாட்டுகளில் நல்ல சாதனை படைத்து வெற்றியை தட்டி செல்வீர்கள். உயர் கல்விக்கான யோகம் அமையும்.

நட்சத்திர பலன்கள்

மிருகசீரிடம் 3, 4ஆம் பாதம் : செய்கின்ற தொழிலில் ஏற்றமும் முன்னேற்றமும் தொடர்ந்த படியே இருக்கும். வியாபாரத்தில் பொருளுக்கான விற்பனை அதிகமாக கிடைக்கும். கணவன் - மனைவி உறவு பலப்படும்.

திருவாதிரை : உங்களது உடல் நலம் சிறப்பாக அமையும். தொழில், வியாபார நிலையில் அதிகமாக லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் யோகம் அமையும்.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதம்: பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்டு இருந்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 5, 6, 14, 23, 24
அதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட தெய்வம் : விஷ்ணு


பரிகாரம் : சனிக்கிழமைகளில் நவகிரகங்களுக்கு ப்ரீதி செய்வது குறிப்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முறையாக வழிபாடு செய்வதும் அவசியமாகும்.
உங்களுக்கு அர்த்தாஷ்டமசனி 21.12.2011 முதல் தொடங்குகின்றது. கடந்த காலத்தில் 3ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரித்தபோது வாழ்வில் பல்வேறு வெற்றிகள் எல்லாம் நாடி வந்தது. தற்போது 21.12.2011இற்கு பிறகு 4ஆம் வீட்டிற்கே சனி பகவான் வந்து விடுகின்றார். எனவே, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும், வருகின்ற பணம் எல்லாம் செலவு ஆகும். ஜென்ம ராசிக்கு 4இல் சஞ்சரிக்கும் சனி பகவான் 3ஆம் பார்வையாக 6ஆம் வீட்டையும் 7ஆம் பார்வையாக 10ஆம் வீட்டையும் 10ஆம் பார்வையாக  ஜென்ம ராசியையும் பார்வை செய்கின்றார். திருப்பங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் : உடல் நலம் சிறிது பாதிக்கும். மனைவி, புத்திரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் சற்றே சுமாராக அமையும். சிலருக்கு பயணங்கள் அலைச்சலை கொடுக்கும்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம் : தொழில், வியாபாரம் முதல் எதிலும் நிதானமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. லாபம் சரிவர அமையாது. தேவையற்ற பயணங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : உடல் நலம் குறைவு ஏற்பட்டு அடிக்கடி துன்பம் உண்டாகும். சிலருக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகி மன அமைதி குறையும். புதிய முயற்சிகள் தடைப்படும்.

பெண்களுக்கு : உங்களுக்கு நற்பலன் குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் தடை ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. குழப்பம், அமைதியற்ற நிலை ஏற்படும். உறவினர்கள் உதவிகரமாக இருக்கமாட்டார்கள்.

மாணவ – மாணவியருக்கு : பொதுவாக கல்வியில் ஆர்வம் குறையும். சிலருக்கு கல்வியில் சிறு சிறு தடை ஏற்படும். உடல் நலன் நன்றாக இருக்காது, எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

நட்சத்திர பலன்கள்

புனர்பூசம் 4ஆம் பாதம் : உங்களது உடல்நிலை சிறிது பாதிக்கும். கணவன் - மனைவி ஒற்றுமை நன்றாக இருக்காது. வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அநேக தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும்.

பூசம் : குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமைக் குறைவு, வரவுக்கு மீறிய செலவு ஏற்படும், கடன் அதிகரிக்கும். பிறருக்கு வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

ஆயில்யம் : தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்புகள் தாமதம் ஏற்படும், மாணவர்களின் கல்வியில் மந்த நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 2, 11, 20, 29
அதிர்ஷ்ட கிழமை : திங்கள்
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம் : வெங்கடாஜலபதி


பரிகாரம் : சனிக்கிழமை சனிபகவானுக்கு விரதம் இருந்து காக்கைக்கு அன்னமிட்டு உணவு உண்பது நற்பலனை உண்டாகும்.
21.12.2011இல் சனி பகவான் முற்றிலும் விடுதலையாகிறார். ஜென்ம ராசிக்கு சனிபகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு உன்னதமான நற்பலன்கள் எல்லாம் உண்டாகும் உங்கள் ஜென்ம ராசிக்கு 3இல்; சஞ்சரிக்கும் சனி பகவான் 3ஆம் பார்வையாக 5ஆம் வீட்டையும் 7ஆம் பார்வையாக 9ஆம் வீட்டையும் 10ஆம் பார்வையாக 12ஆம் வீட்டையும் பார்வை செய்கின்றார். இதனால் தொழில் ஏற்றம், பொருளாதார உயர்வு யாவும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் : ஆரோக்கியமான உடல் நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை உருவாதல், அதனால் மனநிறைவான வாழ்க்கை அமையும்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் நன்மை உண்டாகும். கடன் தொல்லைகள் மறையும். வழக்குகளில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

தொழில், வியாபாரம் : வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும். பெரியவர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கி நல்ல வருமானத்தை பெறலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு : பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் மேலதிகாரி மற்றும் சக ஊழியர்கள் மூலம் ஏற்பட்ட நெருக்கடி குறையும். செல்வாக்கு கூடும், வசதி வாய்ப்புகள் தேடி வரும்.

மாணவ – மாணவியருக்கு : மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையை அடையப் பெறுவீர்கள். ஆசிரியரின் பாராட்டும் பரிசும் கிடைக்கும். நிறைய மதிப்;பெண்கள் வாங்கி அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

நட்சத்திர பலன்கள்

மகம் : உடல் நலம் நன்றாக காணப்படும், குடும்பத்தில் செல்வாக்கு விருத்தியடையும். கணவன் - மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும், கூட்டுத்தொழில் யோகம் கிடைக்கும்.

பூரம் : எல்லா விதத்திலும் ஏற்றம், உயர்வு கொடுக்கும். உடல் நலன் சிறப்பாக அமையும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனம், தானிய  சேர்க்கை அதிகரிக்கும்.

உத்திரம் 1ஆம் பாதம் : நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். கணவன், மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். வழக்குகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 1, 10, 19, 28
அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன்


பரிகாரம் : ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் மன நிறைவு உண்டாகும்.
21.12.2011 முதல் ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பாதசனி தொடங்குகின்றது. எனவே கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள்; சற்றே குறைந்தாலும் இந்த சனிபகவான் சஞ்சரிப்பிலும் மிகவும் நன்மை குறைந்த பலன்களே உண்டு. அவதானம் தேவை.

உடல் ஆரோக்கியம் : உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். மருத்துவ செலவு அதிகரித்து காணப்படும். தேவையில்லாத பயணங்களினால் சோர்வு உண்டாகும். தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் தடை ஏற்படும்.

கொடுக்கல், வாங்கல் : பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பகை ஏற்படும்.

தொழில் வியாபாரம் : தொழில் வியாபாரத்தில் அதிக போட்டி பொறாமைகளும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும், மனவருத்தம் அதிகம் உண்டாகும்.

பெண்களுக்கு : பெண்களுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் ஏதோ ஒரு  காரணத்தினால் அடிக்கடி தடைப்படும். கணவன் - மனைவி உறவு திருப்தியாக அமையாது. உடல்நலக் குறைவு ஏற்படும் பணப்பற்றாக்குறை காணப்படும்.

மாணவ, மாணவியருக்கு : கல்வியில் மந்தமான நிலை உண்டாகும், வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உயர் கல்விக்கான முயற்சியில் சில சமயம் தடைப்படும்.

நட்சத்திர பலன்கள்

உத்திரம் 2, 3, 4ஆம் பாதம் : உடல் நலத்தில் குறை ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் தடைபடும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை குறையும். கொடுக்கல், வாங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். செய்யும் தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்வது கூடாது.

அஸ்தம் : பித்தம், வாயு சம்மந்தமான உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் உற்றார், உறவினர்களால் வீண் பிரச்சினை செலவு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் அதிக சிக்கல்கள் நேரிடும். கணவன் - மனைவி இடையே திருப்தி அற்ற உறவே உண்டாகும். வம்பு, வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும்.

சித்திரை 1, 2ஆம் பாதம் : உங்களது எண்ணங்களை செயல்படுத்துவதில் தடை உண்டாகும். வீண் செலவு ஏற்படும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை இருக்காது. பொருளாதார நிலையில் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 5, 14, 15, 23, 24
அதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட தெய்வம் : விஷ்ணு


பரிகாரம் : திருநள்ளாறு சென்று சனிபகவானையும் தேவியையும் வழிபாடு செய்வதன் மூலம் சோதனைகள் அனைத்தும் குறையும்.
21.12.2011 முதல் nஐன்மராசிக்கு சனி பகவான் சஞ்சரிப்பதால்  பணவரவில் முன்னேற்றம் உண்டாகும். ஆனாலும் nஐன்மத்தில் உள்ள சனியால் உடல் நிலையில் சில பாதிப்புகள் உண்டாகும். உடன் பிறந்தார் வழியில் சங்கடங்கள் ஏற்படும். 10ஆம் வீட்டை சனிபகவான் பார்வை செய்வதால் தொழிலில் போட்டி, சங்கடங்கள் ஏற்படும். ஆனாலும் துலாம் 4, 5இற்கு அதிபதி என்பதால் உங்களுக்கு சனி யோகதாராகிறார்.

உடல் ஆரோக்கியம் : ஜலம் தொடர்பான உடல் உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் அதிகமாக மருத்துவ செலவுகள் உண்டாகுவதால் அமைதி குறையும். புத்திரர்களால் மன சங்கடம் ஏற்படும்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும்போது அதிக நிதானம் தேவை. உடன் இருப்பவர்களே உங்களை ஏமாற்றும் சூழ்நிலை ஏற்படும். வாக்குறுதி, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தொழில், வியாபாரம் : தொழில், வியாபார நிலையில் மறைமுகமாக எதிரிகளின் தொல்லைகளையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகள், புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம், கூட்டுத்தொழிலில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு : உங்களது முயற்சிகள் தடைப்படும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை காணப்படும். கணவன்; - மனைவி இடையே மனஸ்தாபம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும்.

மாணவ, மாணவியருக்கு : கல்வியிலும் விளையாட்டிலும் கவனமுடன் இருக்க வேண்டும். புதிய நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களினால் கெட்ட பலன்தான் ஏற்படுமே தவிர நல்ல பலன் ஏற்படாது. தூர பயணத்தை தவிர்க்கவும்.

நட்சத்திர பலன்கள்

சித்திரை 3, 4ஆம் பாதம் : குடும்பத்தில் திடீர் விரையங்கள் உண்டாகும். பாகப்பிரிவினை உண்டாகும். மறைமுகமாக எதிரிகள் ஏற்படுவார்கள். அதனால் மன நிம்மதி குறையும். செய்யும் தொழிலில் மந்தமான நிலை ஏற்படும். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.

சுவாதி : உடல் நிலை பாதிக்கும், மருத்துவ செலவு அதிகரிக்கும், மனைவிக்கு உடல் நிலை பாதிக்கும். குடும்பத்தில் மன நிம்மதி குறையும். தொழில் நஷ்டம் ஏற்படும். மன நிம்மதியற்ற நிலை உருவாகும். புதிய கடன் உருவாகலாம். சிலருக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

விசாகம் 1, 2, 3ஆம் பாதம் : குடும்பத்தில் நற்பலன்கள் மேலோங்கும். செய்யும் தொழிலில் வெற்றி. புத்திர வழியில் அனுகூலம். வெளிவட்டார பழக்க வழக்கம் போன்றவை அனுகூலத்தை ஏற்படுத்தும். உன்னதமான நற்பலன்கள் உண்;டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 5, 6, 14, 15, 23, 24
அதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
அதிர்ஷ்ட தெய்வம் : லட்சுமி


பரிகாரம் : ஏழரை சனி ஜென்ம சனி நடைபெறுகிறது. சனி விரதமும்  சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் சிறந்தது. தினசரி காக்கைக்கு உணவு வைப்பது, இதுபோன்ற பரிகாரம் செய்வதன் மூலம் உங்களின் சோதனைகள் மறையும்.11ஆம் வீட்டில் சஞ்சரித்த சனி பகவான் உங்களுக்கு ஏற்றமான நற்பலன்களை எல்லாம் கொடுத்தார். 21.12.2011 முடிய ஏழரை சனியில் விரயச்சனி தொடங்குகின்றது. இது உங்களுக்கு புதிய சோதனை. 12இல் உள்ள சனி 3ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்வை செய்கிறார். குடும்பத்தில் பொருள் விரயம், புதுமுயற்சி தடைப்படுதல், சுபகாரியங்கள் தாமதமாதல் போன்றவை ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் : உடல் சோர்வு, ஆரோக்கியம் குறைதல். பிள்ளைகள் உங்களுக்கு கீழ்படியாமை, மனைவியின் ஆரோக்கியம் பாதித்தல் என்பன உண்டாகும்.

தொழில், வியாபாரம் : தொழில், வியாபார நிலையில் அதிக நெருக்கடி உண்டாகி போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். லாபம் இல்லாமல் கடன் நெருக்கடி ஏற்படும். அரசு மூலம் எதிர்பாராத சோதனைகள் வரும். கூட்டு தொழிலில் பிரிவு உண்டாகும்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் நீங்கள் திட்டமிட்டபடி செயல்படமுடியாது. பலவிதமான மன சிக்கல்களில் சிக்கிக்கொள்வீர்கள். பொருளாதார நிலையில் பண முடக்கம் ஏற்படும். வம்பு, வழக்குகளில் இழுபறி நிலை ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : பதவி, ஊதிய உயர்வுகள் தடைப்படும். அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அடிக்கடி உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். ஊழியர்களிடையே போட்டி, பொறாமைகளால் கலகம் உண்டாகும்.

பெண்களுக்கு : உடல் நலனில் அதிகமான அக்கறை செலுத்த வேண்டும். சிலருக்கு ஜலம் தொடர்பான நோய் உண்டாகும். கணவன் - மனைவி  இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டபடி இருக்கும். மன உலைச்சல் உருவாகும்.

மாணவ, மாணவியருக்கு : செய்யாத தவறுக்காக தண்டனையை அடையும்படி நண்பர்களே வழி வகுத்து விடுவார்கள். எல்லோரிடமும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண்கள் விடயத்தில் கேலி செய்வதன் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

நட்சத்திர பலன்கள்

விசாகம் 4ஆம் பாதம் : இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு சோதனையை அதிகமாக தரக்கூடியது. உடல் நலம் எதிர்பாராமல் கெடும். உடல் சோர்வும் ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையுடன் செயல்படவும். கொடுக்கல் - வாங்கலில் சிக்கல்கள் ஏற்படும். டென்ஷனை கட்டுப்படுத்த வேண்டும்.

அனுஷம் : நீங்கள் பொருளாதார நிலையில் ஏற்படும் சங்கடங்களை சீராக்க கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் எந்ந உதவியும் கிடைக்காது. கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் மனஅமைதி குறையும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

கேட்டை : தொடங்கும் எந்த ஒரு காரியமும் தடை, தாமதத்தை ஏற்படுத்தும். தேக ஆரோக்கியம் பாதிக்கும். புத்திர வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும். அரசாங்கம் மூலம் தொழில் வியாபாரத்தில் சோதனைகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையாது.

அதிர்ஷ்ட திகதிகள் : 1, 2, 3, 9, 18, 21, 27, 30
அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு, திங்கள்
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன்


பரிகாரம் : ஏழரை சனி தொடங்கிவிட்டது. சனிப்ரீதி செய்வதும் சனிபகவான் பிடிக்காத தெய்வங்களாகிய ஸ்ரீ ஆஞ்சநேயர், விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதும் மேன்மையான நற்பலனை உண்;டாக்கும்.சனிபகவான் வாக்கிய கணிதப்படி 21.12.2011 முதல் 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். நடக்க இருக்கின்ற 3 ஆண்டு காலமும் உங்கள் வாழ்வில் வெற்றிகள் குவிந்தபடி இருக்கும் பொற்காலம். ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி 3ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும் 7ஆம் பார்வையாக 5ஆம் வீட்டையும் 10ஆம் பார்வையாக 8ஆம் வீட்டையும் பார்வை செய்கிறார். பிள்ளைகளால் கூட பெருமைதரக்கூடிய சம்பவங்கள் தொடர்ந்து உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் : உடல் வலிமை கூடும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் விலகி குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் நற்பலன்கள் ஏற்படும். பொன், பொருள் சேரும்.

தொழில் வியாபாரம் : வியாபாரம் அமோகமாக இருக்கும். இரும்பு தொடர்பான தொழில் லாபத்தைக் கொடுக்கும். அரசு வழியில் உதவி சாதகமான நிலைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : எதிர்பாராத பதவி உயர்வு உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு : காதலில் வெற்றி பெற்று திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். புது முயற்சி வெற்றி தரும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும்.

மாணவ, மாணவியருக்கு : கல்வியில் சுறுசுறுப்பும் உற்சாகமும் ஏற்படும். ஆசிரியர்களும் மாணவர்களும் சாதகமாக நடந்து கொள்வார்கள். அரசு உதவியும் சலுகையும் ஏற்படும். பலவிதமான பாராட்டும் கிடைத்திடும்.

நட்சத்திர பலன்கள்

மூலம் : குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பெருகும். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். கூட்டுத் தொழிலில் யோகம் உண்டு.

பூராடம் : உங்களின் தேக நலன் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் யோகம் ஏற்படும். வெளி வட்டாரப் பழக்கம் சாதகமான பலனை தரும்.

உத்திராடம் 1ஆம் பாதம் : குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 2, 3, 5, 9
அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு, செவ்வாய்
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : தட்சிணாமூர்த்தி


பரிகாரம் :  முடவருக்கு தானம் செய்வது வாழ்வில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
உங்கள் ஜென்மராசிக்கு 9ஆம் வீட்டில் சஞ்சரித்த சனிபகவான் வாக்கிய கணிதப்படி 21.12.2011 முதல் 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும். 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் 3ஆம் பார்வையாக விரய ஸ்தானத்தையும் 7ஆம் பார்வையாக ஜென்ம ராசிக்கு 4ஆம் வீட்டையும் 10ஆம் பார்வையாக ஜென்ம ராசிக்கு 7ஆம் வீட்டையும் 10ஆம் வீட்டையும் பார்வை செய்கிறார். அனுகூலமான நல்லபலன்கள் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் குழப்பம், கூட்டுத் தொழிலில் சங்கடம், புதிய முயற்சி தடைப்படுதல் போன்றவை ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியம், தேக நலன் சிறிது பாதிக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பு, நீர் ஒழுகுதல், தலைவலி உண்டாகலாம். சில புதிய பிரச்சினைகளால் சோர்வு அடைவீர்கள்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட முடியாது. பலவிதமான சிக்கல்களில் சிக்கிக்கொள்வீர்கள். எதிலும் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் : வியாபாரம் மந்தமாகவே நடைபெறும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் சற்று குறையும். கூட்டுத்தொழிலில் நிதானம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு : வேலைப்பளு சற்று கூடும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்;. வேலை தேடுபவர்களுக்கு நிலையான வேலை அமையாது.

பெண்களுக்கு : பெண்களின் உடல்நிலை பாதிக்கும். சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. அனாவசிய செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவி உறவு சுமூகமாக இருக்காது.

மாணவ, மாணவியருக்கு : கல்வியில் ஆர்வம் குறையும். கடின உழைப்பை மேற்கொண்டால் ஓரளவு சாதகமான பலனை அடைய முடியும். தேர்வில் நல்ல மதிப்பெண்னை கஷ்டப்பட்டு பெறும் நிலை ஏற்படும்.

நட்சத்திர பலன்கள்

உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம் : தேகநிலை சுமாராகவே இருக்கும். புத்திர வழியில் சிறு சிறு மருத்துவ செலவுகள் உண்டாகும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்காது. உற்றார், உறவினர்களால் விரோதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.

திருவோணம் : நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வாழ்வில் நிம்மதி குறையும். எதிர்பாராத செலவு, காரியத்தடை போன்றவை இருக்கும். அந்நியர்களின் நட்பு மனக் குழப்பத்தை உண்டாக்குகின்றது.

அவிட்டம் 1, 2ஆம் பாதம்: கணவன் - மனைவியிடையே ஒற்றுமை சுமாராக காணப்படும். மற்றவருக்கு வாக்குறுதி அளிப்பது, முன் ஜாமீன் தருவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருக்கும். திடீர் இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 5, 14, 23, 26
அதிர்ஷ்ட கிழமை : புதன், சனி
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட தெய்வம் : ஐயப்பன்


பரிகாரம் : ஜென்ம ராசிக்கு 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு சனிபகவான் வருவது பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தும். திருமால் வழிபாடு செய்வதும் சனி ப்ரீதி செய்வதும் வாழ்வில் நன்மையை கொடுக்கும், குழப்பங்கள் குறையும்.உங்களுக்கு நடைபெற்ற அஷ்டமசனி 21.12.2011 முதல் சனி பகவான் 9ஆம் வீட்டிற்கு செல்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக சொல்ல முடியாத சோதனைகளை எல்லாம் அனுபவித்து இருப்பீர்கள். ஆனால் இனி வருகின்ற 3 ஆண்டு காலத்தில் மிகவும் நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். திருநல்லாறு சென்று சனி ப்ரீதி செய்வதன் மூலமும் சந்தோஷமான பலன்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் : உடல் நிலை சிறப்பாக காணப்படும். மருத்துவ செலவுகள் குறையும். உற்சாகத்துடனும் புதுப்பொலிவுடனும் காணப்படுவீர்கள்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை உருவாகும். பெரிய தொகைகளை முதலீடு செய்வதால் நல்ல லாபப் பலனை அடைவீர்கள். சிறு வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

தொழில், வியாபாரம் : உங்கள் தொழில், வியாபாரத்தில் அதிகமான ஏற்றம் அடைவீர்கள். வெளிநாட்டு தொடர்பான தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பான லாபத்தை ஏற்படுத்தும். தொழிலில் அனைவருக்கும் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : அதிகாரிகள் பாராட்டும் வண்ணம் காரிய சாதனை புரிவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் அமைந்து குடும்பத்துடன் ஒன்று சேரும் நிலை உருவாகும்.

பெண்களுக்கு : பெண்களுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக அமையும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். திருமண சுப காரியங்கள் இனிமையாக நடைபெறும். கணவன் - மனைவி  உறவு பலப்படும். தாய் வழி உறவு பலப்படும். தாய்மை அடையும் யோகம் உண்டு.

மாணவ, மாணவியருக்கு : பெற்றோர், ஆசிரியர் ஆதரவு அதிக நற்பலனை ஏற்படுத்தும். சாதனைகளை எளிதில் படைக்கும் அமைப்பு உண்டாகும். கல்வி, விளையாட்டுகளில் பரிசும் பாராட்டும் கிடைக்கும். பொதுத் தேர்வுகளில் வெற்றி மேல் வெற்றி உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும்.

நட்சத்திர பலன்கள்

அவிட்டம் 3, 4ஆம் பாதம் : உங்களின் வாழ்க்கை நிலை சிறப்பாக அமையும். தடைப்பட்ட திருமணம், சுபகாரியங்கள் உடனே நடைபெறும். பணவரவு தாராளமாக அமையும். தனம், தானிய விருத்தி உண்டாகும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும்.

சதயம் : உங்களது உத்தியோக நிலையில் எதிர்பார்த்த மற்றும் விரும்பிய இடமாறுதல் அமையப்பெறும். சிலருக்கு கௌரவ பதவி, ஊதிய உயர்வுகளும் இக்காலத்தில் அமையப்பெறும். நீண்ட நாட்களாக தொழில் வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு நல்ல நிரந்தரமான வேலை வாய்ப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளும் உடன் பணியாற்றுபவர்களும் பாராட்டும் படியாக சிறப்பாக செயல்படுவீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம் : குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். சுபகாரியம் சிறப்பாக கைகூடும். உற்றார், உறவினர்கள் பகையை மறந்து வருவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் இலாபத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 1, 2, 10, 11, 19, 20, 28, 29
அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு, திங்கள்
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு, ஊதா
அதிர்ஷ்ட தெய்வம் : ஆஞ்சநேயர்


பரிகாரம்: சனி ப்ரீதி செய்வதும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் மேன்மையான நற்பலனை கொடுக்கும்.
உங்கள் ஜென்ம ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு சனிபகவான் 21.12.2011 முதல் சஞ்சாரம் செய்கிறார். உங்களுக்கு அஷ்டமச்சனி தொடங்குகின்றது. எந்த காரியத்தையும் எளிதாக முடிக்க முடியாமல் பல்வேறு சோதனைகளை சந்திக்கும் அமைப்பு உண்டாகும். 8ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் 3ஆம் பார்வையாக 10ஆம் வீட்டை பார்வை செய்கிறார். 5ஆம் வீட்டை சனிபகவான் 10ஆம் பார்வையாக பார்வை செய்கிறார்.

உடல் ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கும். ஜலம் தொடர்பானவைகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் உடல்நிலையிலும் சிறு சிறு பாதிப்பு உண்டாகும். தேவையற்ற அலைச்சலை தவிர்க்கவும்.

கொடுக்கல், வாங்கல் : கொடுக்கல், வாங்கலில் திட்டமிட்டபடி  செயல்பட முடியாது. பலவிதமான சிக்கல்கள் உண்டாகும். பணவரவில் தடை ஏற்படும். அசையா சொத்து வகையில் செலவு ஏற்படும்.

தொழில், வியாபாரம் : தொழில், வியாபார நிலையில் அதிகமான நெருக்கடி உண்டாகி போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். லாபம் இல்லாத நிலையிலும்  கடன் நெருக்கடிகளும் ஏற்படும். கூட்டுத் தொழில் சிலருக்கு பிரிவை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : பதவி, ஊதிய உயர்வுகள் தடைப்படும். அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அடிக்கடி உடல் நலம் கெடும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலை நிரந்தரமாக அமையாது.

பெண்களுக்கு : பெண்களுக்கு உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். கணவன் - மனைவி இடையே சண்டை சச்சரவுகளால் ஒற்றுமை குறையும். உத்தியோக நிலையில் மேலதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படும்.

மாணவ, மாணவியருக்கு : செய்யாத தவறுக்கு தண்டனையை அடையவேண்டும். கூட இருக்கும் நண்பர்களால் தவறுகள் நடைபெறும். எனவே எல்லோரிடமும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நட்சத்திர பலன்கள்

பூரட்டாதி 4ஆம் பாதம் : உங்களுக்கு சோதனை தரும் காலமாகவே அமையும். உடல் நலம் எதிர்பாராமல் கெடும். அலைச்சல், டென்ஷனை கட்டுப்படுத்த வேண்டும். வேலையாட்கள் எப்பொழுதும் பிரச்சினை செய்வார்கள். இலாபம் குறையும்.

உத்திரட்டாதி : உங்களுக்கு பொருளாதார நிலையில் சங்கடங்கள் ஏற்படும். நெருங்கியவர்களிடம் கடன் வாங்கி சமாளிக்க நேரிடும். தேவையற்ற வம்பு, வழக்கு சிக்கல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் மன அமைதி குறையும்.

ரேவதி : எந்தவொரு காரியமும் தடை, தாமதத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். குடும்பத்தில் கடன்கள் அதிகரிக்கும். அரசாங்கம் மூலம் தொழில், வியாபாரத்தில் சோதனைகள் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் குறையும்.

அதிர்ஷ்ட திகதிகள் : 3, 12, 21, 30
அதிர்ஷ்ட கிழமை : வியாழன்
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பொன்னிறம்
அதிர்ஷ்ட தெய்வம் : தட்சிணாமூர்த்தி


பரிகாரம் : அஷ்டம சனி தொடங்கிவிட்டது. நவகிரக சனிபகவான் வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் சந்தோஷம் உண்டாகும். ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடு செய்வதால் வாழ்வில் சோதனைகள் குறையும்.
 

"சனி பெயர்ச்சி பலன்கள் - 2011" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (9)
neethan 20-12-2011 11:10 PM
சனி பெயர்ச்சி, அமைச்சரவை மாற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ?
Reply .
0
0
pasha 21-12-2011 07:40 PM
சோதிடர்களுக்கு தமக்கு நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாது. மற்றவர்களுக்கு பலன் சொல்கிறார்கள்.
Reply .
0
1
THIVAAN 22-12-2011 03:01 AM
இதுகும் பழைய பஞ்சாங்கம்தான் , பழைய காப்பி.
Reply .
0
0
Sathish kumar 24-12-2011 02:28 AM
இந்த ஊரு நம்பள இன்னுமா நம்பிட்டு இருக்கு...........????????????
Reply .
0
0
vijay 26-12-2011 02:07 AM
நல்லா டப்பா அடிகிரிங்க .
Reply .
0
0
suthan 29-12-2011 06:34 PM
சோதிடரே ஏதாவது புதுசாக சொல்லுறதுக்கு அடுத்த வருடம் பிளான் பண்ணுங்கோ ...அது சரி உங்களுக்கு சனி மாறிட்டுதா அல்லது பிடிச்சுடுதா .....எப்பவோ முடிந்த காரியம் .......
Reply .
0
0
niro 30-12-2011 09:39 PM
எல்லாம் மாறிமாறி இருக்குது.
Reply .
0
0
arun 28-02-2012 05:57 PM
நல்லாத்தான் சொல்றங்கயா !
Reply .
0
0
malar 28-03-2012 05:28 PM
எல்லாம் தப்பாக உள்ளது
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty