குரு பெயர்ச்சி பலன்கள் - 2012
16-05-2012 08:59 AM
Comments - 0       Views - 12075
குரு பெயர்ச்சி பலன்கள் - 2012நந்தன வருடம் வைகாசி மாதம் 4ஆம் திகதி (17.05.2012) வியாழக்கிழமை இரவு 6.27 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் இடப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் விஜய வருடம் வைகாசி மாதம் 12ஆம் திகதி (26.05.2013) ஞாயிற்றுக்கிழமை வரை இடப ராசியில் உலா வருகின்றார்.


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய

குருபகவான் 17.05.2012 முதல் மேட ராசிக்கு 2இல் சாதகமான நிலையில் சஞ்சாரம் செய்கின்றார். 17.05.2012 முதல் தன ஸ்தானமான 2ஆம் இடத்தில் குருபகவான் உலா வருகின்றார். அற்புதமான நல்ல பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்குவார். சென்ற வருடத்தில் இருந்து வந்த பணப் பிரச்சினைகள் குறையும், பொருளாதார நிலை மேம்படும், குடும்பத்தில் நன்மை பெருகும், சுபகாரியங்கள் நடைபெறும், திருமண தடை நீங்கும், ஆடை- ஆபரணங்களின் சேர்க்கை அதிகமாகும், கடன் சுமை குறையும், புதிய வீடு வாங்குவீர்கள், பழைய கடன் வசூல் ஆகும், வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும்.

15.11.2012 முதல் கண்டக சனி நடைபெறுகின்றது. எனவே உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு, வேலையில் மாறுதல் கிடைக்கும். குருபகவான் சாதகமாக இருப்பார், எனினும் கண்டக சனியாக இருப்பதால் பயணத்தின் போது நிதானமாக செல்ல வேண்டும்.

கொடுக்கல் - வாங்கல்
தொழில் செய்வோர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். பழைய பாக்கி வசூல் ஆகும். வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். வங்கியில் பண உதவி கிடைக்கும், அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

அரசு பணியாளர்கள்
அரசு பணியாளர்கள் இதுவரை சந்தித்த வேலை பழுவிலிருந்து விடுபடுவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவார்கள், உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் விலகி விடுவார்கள்.

தொழிலாளர்கள்
தொழிற்சாலையில் நல்ல இலாபம் கிடைக்கும், நினைத்தது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

பெண்கள்
திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். வருமானம் அதிகமாகும். உங்கள் யோகத்தில் கணவரும் அதிக லாபம் அடைவார்கள்.

ஆரோக்கியம்
குரு சாதகமாக இருப்பதால் உடலில் ஏற்பட்ட நோய் மறையும். குருசாதகமாக இருந்தாலும் கண்டகசனி நடைபெறுவதால் பயணத்தில் கவனம் தேவை. வாகனத்தை ஓட்டும்போது மெதுவாக ஓட்ட வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரம்     :  80 வீதம்
பரணி  நட்சத்திரம்        :  100 வீதம்
கார்த்திகை 1 ம் பாதம்    :  70 வீதம்
கிருத்திகை 2, 3, 4 ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம் முடிய

குருபகவான் 17.05.2012 முதல் 26.05.2013 வரை ஜென்ம ராசியில் உள்ளார். பொருளாதார தட்டுப்பாடு வராது என்றாலும் கொடுக்கல் வாங்கலில் சற்று யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6இல் இருப்பது உத்தமம். பழைய கடன் குறையும். மறைமுக வருமானம் வரும். வம்பு வழக்குகள் வந்து சேரும். ஆண்கள் - பெண்களையும் பெண்கள் - ஆண்களையும் ஏமாற்றும் சூழ்நிலை அமையும். இடையிடையே பிரச்சினை தடை ஏற்பட்டாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். புதிய முயற்சிகள் நிறைவேறும், சொத்து பிரச்சினைகள் தீரும்.

கொடுக்கல் - வாங்கல்
பழைய பாக்கி வசூல் ஆகும். விரயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சுப விரயச் செலவுகள் அதிகமாகும். கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சிக்கனமாக வாழ்ந்தால் மட்டுமே புதிய கடன் வராமல் தடுக்க முடியும்.

அரசு பணியாளர்கள்
இந்த குருபகவான் பெயர்ச்சி சாதகமாக இல்லை. எனவே உயர் அதிகாரிகளை அனுசரித்து போவது நல்லது. விரும்பாத இடத்திற்கு இடமாறுதல்கள் வந்து சேரும். சக பெண்கள் ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள்
புதிய தொழில் தொடங்கக் கூடாது. தொழிலில் மந்;த நிலை ஏற்படும். அரசு தரப்பில் எதிர்பார்த்த நிதி உதவி வருவதில் தாமதமாகும். தொழிலாளர்கள் மேலதிகாரிகளை பணிந்து போவது நல்லது.

பெண்கள்
குடும்பத்தில் சிக்கனம் தேவை. திருமணம் கைகூடும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை வீடு தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆரோக்கியம்
பெரிய நோய் எதுவும் ஏற்படாது. சிறு சிறு மருத்துவ செலவுகள் வரும். எளிமையான உணவு பழக்கம் நோயின் தாக்கத்தை குறைக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம் : 60 வீதம்
ரோகிணி நட்சத்திரம் : 70 வீதம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம் : 90 வீதம்

மிருகசீரிடம் 3, 4ஆம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3ஆம் பாதம் முடிய

குரு உங்கள் ராசிக்கு 12இல் உலா வரும் போது பணத் தேவைகளை அதிகம் உண்டு பண்ணும். அதற்காக நீங்கள் அதிகம் பாடுபட வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த பணத்தை நீங்கள் சம்பாதித்தாலும் எதிர்பாராத விரையச் செலவுகள் வந்து சேரும். மனைவி வழி சொத்துக்கள் வரும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஊழியர்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும், நிர்வாகம் செய்பவர்களுக்கு சில பிரச்சினைகள் வரும்.

கொடுக்கல் - வாங்கல்
வியாபாரிகள் நல்ல இலாபத்தை அடைவார்கள். குரு 12இல் இருக்கும் போது சற்று யோசித்து செய்ய வேண்டும். அதிக முதலீடு செய்யாதீர்கள். யாருக்கும் பணத்திற்காக முன்ஐhமீன் போட வேண்டாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசு பணியாளர்கள்
அதிக வேலைப்பழு உண்டாகும். ஒருசிலருக்கு பதவி உயர்வு வரும். விரும்பாத இடத்திற்கு மாறுதல்கள் வரும், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.

தொழிலாளர்கள்
தொழில் செய்வோர் தற்சமயம் தங்கள் தொழிலில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம்.

பெண்கள்
குழந்தைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும், குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ராசிக்கு 5இல் சனி பகவான் இருப்பதை மனதில் கொள்ள வேண்டும். தாய் வழியில் வரவேண்டிய சொத்துக்கள் வந்து சேரும், குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடைபெறும்.

ஆரோக்கியம்
வாகனம் உபயோகத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இரவு நேர பயணத்தில் சொந்த வாகனத்தில் போவதை தவிர்க்கவும். பேருந்துகளில் செல்வது நல்லது. வயது முதிர்ந்த பெற்றோர்கள் காரணமாக மருத்துவ செலவு வரும்

மிருகசீரிஷம் 3, 4ஆம் பாதம் : 80 வீதம்
திருவாதிரை நட்சத்திரம் : 75 வீதம்
புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதம் : 90 வீதம்

புனர்பூசம் 4ஆம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய

குருபகவான் 17.05.2012 முதல் 26.05.2013 வரை இடப ராசியில் 11இல் அமர்ந்து உலா வருகின்றார். தடைப்பட்டு வந்த பொருளாதாரம் உயரும். வீட்டில் சுபகாரிய பேச்சு நடைபெறும். இனிமேல் வேலையில் மிகவும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அரசு வேலையில் நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். தடைப்பட்டு வந்த பதவி உயர்வு வந்து சேரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும் காலம். ஆசைகள் நிறைவேறி அதிர்ஷ்டம் தரும். பூமி, வீடு, வாகனம் யோகம் கிடைக்கும்.

கொடுக்கல் - வாங்கல்
இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் தீரும். பழைய பாக்கி அனைத்தும் வசூல் ஆகும். பூர்வீக சொத்து விற்பனை ஆகும். நல்ல இலாபம் பெறுவீர்கள்.

அரசு பணியாளர்கள்
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு, வண்டி, வாகன யோகம் வரும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அர்த்தாஷ்டமச்சனியால் பாதிப்பு எதுவும் வராது.

தொழிலாளர்கள்
எதிர்பார்த்த கடன் வந்து சேரும். தொழிற்சாலை விரிவாகும். அயல் நாட்டிலிருந்து புதிய புதிய ஓடர்கள் வரும். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு உற்பத்தியை இருமடங்காக உயர்த்துவார்கள். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்;.

பெண்கள்
பெண்கள் குடும்பச்சுமையில் தவித்து வந்த நிலை மாறி மனநிலையில் தெளிவு ஏற்படும். இது நல்ல காலம். உங்கள் கோரிக்கைகளை குருபகவான் கனிவோடு நிறைவேற்றி வைப்பார்.

ஆரோக்கியம்
இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். விபத்துகள், ஆபத்துகள் நீங்கும். பெண்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவு பெறும். நோய்கள் அனைத்தும் குணமாகும்.

புனர்பூசம் 4ஆம் பாதம் : 90 வீதம்
பூசம் நட்சத்திரம் : 80 வீதம்
ஆயில்யம் : 100 வீதம்

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்; முடிய

குருபகவான் 17.05.2012 முதல் 10ஆம் இடத்தில் உலாவருகின்றார். மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினைகள் அகலும். அரசு ஊழியர்கள் எதிர்பாராத மாறுதல்களை சந்திப்பீர்கள். பதவி உயர்வு தாமதமாக வந்து சேரும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.

கொடுக்கல் - வாங்கல்
பணவரவில் சிரமம் இல்லை. ஒருசிலர் புதிய வீடு கட்டுவார்கள். வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்து வரவு செலவை சரி செய்ய வேண்டும். அப்பொழுது தான் பொருளாதார நெருக்கடி வாராது.

அரசு பணியாளர்கள்
உங்;கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். உடன் பணி புரிபவர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். பெண் ஊழியர்களால் தொல்லையும் அவர்கள் காரணமாக சிலருக்கு மாறுதல்கள் வரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் வருவதில் தாமதமாகும். புதிதாக முதலீடு செய்வதை தவிர்க்கவும். வரவு செலவு செய்பவர்கள் நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் கடன் கொடுக்கவும்.

தொழிலாளர்கள்
சந்தித்துவந்த நஷ்டத்திலிருந்து மீள்வார்கள்;. புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். முதலாளி - தொழிலாளி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

பெண்கள்
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டைகள் நீங்கும். கணவன் - மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். சேமிப்பு உயரும். கணவரின் நோய் குணமாகும். சுபகாரியங்கள் நடைபெறும். தாய் வீட்டில் வரவேண்டிய சொத்துக்கள் வந்து சேரும்.

ஆரோக்கியம்
தாய், தந்தையர் வழியில் மருத்துவ செலவுகள் வந்து சேரும். நீர் சம்மந்தப்பட்ட நோய்கள் வந்து நீங்கும். பெரிய ஆபத்து எதுவும் வராது. விபரீத நோய்கள் எதுவும் வராது. மனைவிக்காக சிறிய மருத்துவ செலவு செய்ய வேண்டியது வரும்.

மகம்; நட்சத்திரம் : 80 வீதம்
பூரம் நட்சத்திரம் : 70 வீதம்
உத்திரம் 1ஆம் பாதம் : 70 வீதம்

உத்திரம் 2, 3, 4ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதம் முடிய

17.05.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9இல் சஞ்சாரம் செய்ய உள்ளார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பத்தில் அற்புதமான நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார். பணப் பற்றாக்குறை அகலும், கூடுதல் வருவாயை பெறுவீர்கள், திருமணம் கைகூடும், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் பெறுவார்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வோடு விரும்பிய மாறுதல்கள் கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களும் நல்ல இலாபத்தை பெறுவார்கள்.

கொடுக்கல் - வாங்கல்
பொருளாதாரநிலை உயரும். பொருளாதாரத்தில் தன்நிறைவு பெறுவீர்கள். தொழில் புரிவோர் நல்ல வருமானத்தை பெறுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.

அரசு பணியாளர்கள்
இதுவரை இருந்து வந்த வேலைப்பழுவிலிருந்து விடுபடுவார்கள். முக்கிய பொறுப்புகளில் பணி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகள் அரசாங்கத்தில் கௌரவ பதவியை அடைவார்கள்.

தொழிலாளர்கள்
சந்தித்துவந்த நஷ்டத்திலிருந்து மீள்வார்கள். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் அனைத்தும் விலகும், புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். முதலாளி - தொழிலாளி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

பெண்கள்
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டைகள் நீங்கும். கணவன் - மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும், சேமிப்பு உயரும். சுபகாரியங்கள் நடைபெறும். தாய் வீட்டில் வரவேண்டிய சொத்துக்கள் வந்து சேரும்.

ஆரோக்கியம்
குரு 9ஆம் இடத்தில் உள்ளார். இக்காலகட்டத்தில் தீராத நோய் கூட தீர்ந்து விடும். குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ செலவு குறையும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உத்திரம் 2, 3, 4ஆம் பாதம் : 100 வீதம்
அஸ்தம் நட்சத்திரம் : 80 வீதம்
சித்திரை 1ஆம் பாதம் : 90 வீதம்

சித்திரை 3, 4ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதம் முடிய

17.05.2012 முதல் குருபகவான் 26.05.2013 உங்கள் ராசிக்கு 8இல் வந்தால் நல்ல பலன்கள் குறைவாக தருவார். பணம் சரளமாக புரளாது. ஒருசிலருக்கு கடன் சுமை கூடும். திருமணம் நடைபெறும், இருந்தாலும் அதிக சிரமத்திற்கு பின்னரே அமையும். அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும், வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவேண்டும்.

கொடுக்கல் - வாங்கல்
பொருளாதாரநிலை உயரும். தொழில் புரிவோர் நல்ல வருமானத்தை பெறுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.

அரசு பணியாளர்கள்
தங்கள் பணியில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகமாகும். ஒருசிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் தொலை தூரத்திற்கு மாறுதலுடன் கிடைக்கும். வரவேண்டிய நிலுவை பாக்கி வந்து சேரும். குடும்பத் தேவைகள் அதிகமாகும்.

தொழிலாளர்கள்
தொழிலை விரிவுபடுத்தும் திட்டத்தை தள்ளி போட வேண்டும், தொழிலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். முதலாளிகளின் போக்கு பிடிக்காமல் சில தொழிலாளிகள் வேலையை விட்டு விலகும் சூழ்நிலைகூட உருவாகலாம்.

பெண்கள்
பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எப்பொழுதும், பிறந்த வீட்டு பெருமைகளை பேசாதீர்கள். உங்கள் சகோதரர்களால் எந்த நல்ல பலனும் கிடைக்காது. தாய்வீட்டு சொத்துக்கள் வருவதில் தாமதமாகும், என்றாலும் பொருளாதார பற்றாக்குறையை சந்;திக்க மாட்டீர்கள்.

ஆரோக்கியம்
துலாம் ராசியில் பிறந்த ஆண் - பெண் இருபாலருக்கும் குரு 8இல் உள்ள போது வயிற்று வலி போன்ற தொந்தரவுகளை சந்திப்பீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும்.

சித்திரை 3, 4ஆம் பாதம் : 60 வீதம்
சுவாதி நட்சத்திரம் : 70 வீதம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம் : 85 வீதம்

விசாகம் 4ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய

இதுவரை குரு 6இல் அமர்ந்து தடை, தாமதங்களை தந்து வந்தார். 17.05.2012 முதல் குருபகவான் 26.05.2013 வரை உங்கள் ராசிக்கு 7இல் அமர்ந்து குடும்பத்தில் அநேக நன்மைகளை செய்வார். திருமணம் ஆகாத ஆண் - பெண் இருவருக்கும் திருமணத்தடை நீங்கும். விலகிச்சென்ற சொத்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெறும். தாய் - தந்தை வழியில் ஏற்பட்ட மருத்துவ செலவு குறையும். கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை சிரமத்தையே அனுபவித்த அரசு ஊழியர்கள் எல்லா வகையிலும் நல்ல பலன்களையே அடைவார்கள். வர வேண்டிய நிலுவை தொகை முழுவதும் வந்து சேரும். தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிக்கும். புதிய பதவிகள் வந்து சேரும்.

கொடுக்கல் - வாங்கல்
தொழில் செய்வோர் நல்ல ஏற்றம் பெறுவார்கள். குடும்பத்தில் பொன்னும் பொருளும் அதிகரிக்கும். பொருளாதார உயர்வுகளை அடைவார்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்வார்கள்.

அரசு பணியாளர்கள்
எதிர்பார்த்த பதவி உயர்வு, மாறுதல்கள் வந்து சேரும். வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகள் மாறுதலில் செல்வார்கள். எப்பொழுதும் பணத்துடன் சிரமம் இல்லாமல் வாழ்வீர்கள்.

தொழிலாளர்கள்
தொழிலதிபர்கள் தாங்கள் நினைத்த படி தொழிலை விரிவு செய்வார்கள். உங்களுக்கு இருந்து வந்த கடன் சுலபமாக மறையும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் எளிதாக கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற சலுகைகள் அடைவார்கள். சிலர் வெளிநாடு சென்று புதிய ஓடர்களை பெறுவார்கள். ஏற்கனவே உள்ள பங்குதார்களும் புதிதாக வந்த பங்குதாரர்களும் உங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

பெண்கள்
இல்லத்தரசிகளுக்கு இது ஒரு பொற்காலம். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை அதிகமாகும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்கும். கடன் சுமை குறைந்து நல்ல வருமானம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் உழைத்து பணம் சம்பாதிப்பதை பார்த்து மகிழ்வார்கள். வீட்டில் எப்பொழுதும் வசந்தம் வீசும்.

ஆரோக்கியம்
நோய் தாக்கம் குறையும்

விசாகம் 4ஆம் பாதம் : 100 வீதம்
அனுசம் நட்சத்திரம் : 100 வீதம்
கேட்டை நட்சத்திரம் : 90 வீதம்

மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய

குருபகவான் 6இல் வந்தால் கை, கால்களில் பந்தனம் ஏற்படும் என்பது பொது விதி. எனவே எப்பொழுதும் மெதுவாக நடக்க வேண்டும். வாகனங்களில் மெதுவாக செல்ல வேண்டும். அதிக வேகமாக செல்ல வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எந்த காரியத்திற்கும் அதிக முயற்சியும் அலைச்சலும் எடுக்க வேண்டும். ஆனால், அந்த காரியங்களில் வெற்றியும் காண்பீர்கள். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செய்ய வேண்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் உங்களை விட்டு செல்லாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கொடுக்கல் - வாங்கல்
சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். ஏனெனில் பணப் புழக்கம் அதிகமாக இருக்காது. கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை.

அரசு பணியாளர்கள்
தங்கள் பணியில் மிகவும் கவனத்துடன் செயல் பட வேண்டும். வேண்டாத சிலபேர் உங்களை வீண் வம்பில் மாட்டிவிடுவார்கள்.

தொழிலாளர்கள்
பொறுமையுடன் செயல்பட வேண்டும். தொழிலாளர்கள் - மேல் அதிகாரிகளிடம் கேட்ட தொகை வருவதில் தாமதமாகும். இருக்கும் வேலையை விடமால் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் தொல்லைகள் அதிகம் வராது, பொருளாதார கஷ்டம் வராது.

பெண்கள்
குடும்பத்தில் அதிக பொறுமையை கையாள வேண்டும். பொருளாதார தடடுப்பாடுகள் காரணமாக வீண் சண்டைகள் வரலாம். குருபகவான் அருளால் விபத்துக்கள் எதுவும் வராது. தொடர்ந்து குரு வழிபாட்டை செய்யுங்கள். குடும்பத்தில் அமைதியும் வளமும் பெருகும்.

ஆரோக்கியம்
உடல் நலக்குறைவு தென்பட்டால் ஆரம்பத்திலேயே நல்ல மருத்துவரை அணுகவும். வீண் செலவுகளை குறைக்கும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மூலம் நட்சத்திரம் : 60 வீதம்
பூராடம் நட்சத்திரம் : 70 வீதம்
உத்திராடம் 1ஆம் பாதம் : 55 வீதம்
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதம் முடிய

குருபகவான் உங்கள் ராசிக்கு 5இல் இடப வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களை தருவார். பஞ்சம ஸ்தானத்தில் அமர்வது நல்லது. இந்த குருபெயர்ச்சி காலம் உங்களுக்கு பொற்காலம். குடும்பத்தில் உங்களுக்கு சுபிட்ஷம் பெருகும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு முழுமையாக நீங்கும். சுபகாரிய நிகழ்ச்சி நடைபெறும். வியாபாரிகள் திட்டமிட்டபடி வியாபாரத்தில் அதிக லாபத்தை பெறுவார்கள்.

கொடுக்கல் - வாங்கல்
எவ்வளவு உழைத்தாலும் சேமிக்க முடியாமல் இருந்த நிலை மாறும். பழைய கடன் அனைத்தும் வசூல் ஆகும். சொத்துக்கள் பற்றிய வழக்கு உங்களுக்கு சாதகமாக மாறும்.

அரசு பணியாளர்கள்
அரசு பணியாளர்களுக்கு நல்ல மாறுதல்கள் கிடைக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பதவி உயர்வு வந்து சேரும். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.

தொழிலாளர்கள்
தொழிலதிபர்கள் புதிய கிளைகள் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். அயல் நாட்டிலிருந்து புதிய ஓடர்கள் வந்து சேரும். பங்குதாரர்கள் அனைவரும் சுமூக உறவோடு இருப்பார்கள்.

பெண்கள்
இல்லத்தரசிகளின் வேதனைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வுகள் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும், பெற்றோர்களின் கவலை மாறும். கணவன் - மனைவி ஒற்றுமை கூடும்.

ஆரோக்கியம்
இதுவரை குடும்பத்தில் நிலவி வந்த மருத்துவ செலவுகள் குறையும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம் : 80 வீதம்
திருவோணம் நட்சத்திரம் : 100 வீதம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம் : 70 வீதம்

அவிட்டம் 3, 4ஆம் பாதம் முதல் சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம் முடிய

குருபகவான் 4இல் வருவதால் நீங்கள் எல்லாவிதத்திலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒருசிலர் வேறு இடத்திற்கு குடியேறுவார்கள். எல்லாவிதமான வசதியும் வரும். அலைச்சல் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் வந்து நீங்கும். கணவன் - மனைவி உறவில் தேவையில்லாத பிணக்குகள் வரும். அரசு ஊழியர்கள் கடும் பணிச் சுமைகளை எதிர்கொள்ளுவார்கள். மேலதிகாரிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும்.

கொடுக்கல் - வாங்கல்
எவ்வளவு உழைத்தாலும் சேமிக்க முடியாமல் இருந்த நிலை மாறும். பழைய கடன் அனைத்தும் வசூல் ஆகும்.

அரசு பணியாளர்கள்
எப்பொழுதும் தங்கள் கடமையில் கவனமாக செயல்பட வேண்டும். பதவி உயர்வுகள் வருவதில் தாமதமாகும். வீடு கட்டுதல் போன்ற திட்டங்களைத் தள்ளிப் போட வேண்டும்.

தொழிலாளர்கள்
தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியை தள்ளி வைக்க வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெண்கள்
சிக்கனமாக வாழ்வதால் வீண் கடன் சுமை வருவதை தவிர்க்கலாம். எப்பொழுதும் பணத் தேவைக்காக பிறரை எதிர்பார்க்காமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். முன்பின் அறியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். குழந்தைகளிடம் அன்பாக பழக வேண்டும்.

ஆரோக்கியம்
உடல்நிலை சற்று குறைவாக இருக்கும், கவனமாக செயல்பட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் எளிய உணவுகளை உண்ண வேண்டும்.

அவிட்டம் 3, 4ஆம் பாதம் : 65 வீதம்
சதயம் நட்சத்திரம் : 80 வீதம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம் : 70 வீதம்


பூரட்டாதி 4ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய

குருபகவான் உங்கள் ராசிக்கு 3இல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் உங்களுக்கு அஷ்டமத்துச்சனி நடக்கின்றது. இதனால் உங்கள் பேச்சில் இனிமை மாறிவிடும். என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்று சிந்திக்காமல் மற்றவர்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருப்பீர்கள். பணவரவில் தட்டுப்பாடு ஏற்படும். உங்கள் தேவைகள் நியாயமான செலவுதானா என்று யோசித்து செயல்பட வேண்டும். குருபகவானை எப்பொழுதும் வணங்குபவர்கள் வாழ்வில் நிம்மதியான நிலையை அடைவார்கள்.

கொடுக்கல் - வாங்கல்
பணத் தேவைகள் அதிகமாகும். நேசித்தவர்களே உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். ஒருசிலர் கொடுத்த பணத்தை வாங்குவதற்கு வழக்கை சந்திப்பார்கள். தேவைக்காக பூர்வீக சொத்தை விற்க வேண்டிய நிலை உருவாகும். உறவினர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

அரசு பணியாளர்கள்
அரசு பணியாளர்கள் அதிகமான வேலைப்பழுவைச் சந்திப்பார்கள். உயர் அதிகாரிகள் எப்பொழுதும் கெடுபிடியாக நடந்து கொள்வார்கள்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் வேலைபார்க்கும் இடத்தில் வேலைப்பழு கூடுதலாகும். ஒருசிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வார்கள்.

பெண்கள்
குடும்பத்தில் செலவினங்கள் கூடும். அவசரப்பட்டு முடிவு செய்யும் திருமணம் நல்ல பலனை அடையாது. முடிவு எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் கோபத்தை குறைத்து விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்
பெரிய பாதிப்புக்கள் இல்லை

பூரட்டாதி 4ஆம் பாதம் : 65 வீதம்
உத்திரட்டாதி நட்சத்திரம் : 90 வீதம்
ரேவதி : 70 வீதம்

"குரு பெயர்ச்சி பலன்கள் - 2012" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty