குரு பெயர்ச்சி பலன்கள் - 2013
28-05-2013 06:32 PM
Comments - 2       Views - 7001


குரு பெயர்ச்சி பலன்கள் - 2013

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி விஜய வருடம் வைகாசி மாதம் 14ஆம் நாள் (28.05.2013) செவ்வாய்க்கிழமை இரவு 9.18இற்கு இடபத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரம் 3ஆம் பாதம் மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைகிறார்.
 
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி விஜய வருடம் வைகாசி மாதம் 16ஆம் நாள் (30.05.2013) வியாழக்கிழமை மாலை 3.55 இற்கு இடபத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரம் 3ஆம் பாதம் மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைகிறார்.
 
இராசிகளுக்கு உண்டான பலன்களும் பரிகாரங்களும்
 
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!
 
உடன் பிறப்புக்கள் இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். நண்பர்கள் மூலம் பிரச்சினை உண்டாகும். விலை மதிக்கமுடியாத பொருட்கள் மூலம் நஷ்டம் ஏற்படும். கடன் சுமை அதிகரிக்கும். நிம்மதி குறையும், எதிர்பார்ப்பு தடைப்படும். குரு பெயர்ச்சியானது அசுர பலன்களையே தருவதால் வாழ்வில் எடுக்கும் தீர்மானங்களில் கவனத்துடன் இருக்கவும்.
 
பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவருக்கு 3 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஏலக்காய் மாலை சாற்றி வர துன்பம் விலகும்.
 
 
 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
 
பெறுமதிமிக்க சொத்துக்கள் சேரும் வாய்ப்புண்டு. நீண்ட நாள் திருமணத்தடை அகலும். மேற்கல்வியை தொடங்க வாய்ப்புண்டு. நல்ல வருமானமும் குழந்தைகளால் பெற்றோருக்கு நல்ல பெயரும், கணவன் - மனைவி பிரச்சினை தீர்ந்து அன்யோன்யம் உருவாகும்.
 
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வணங்கி வர நன்மை பெருகும்.
 
 
 
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
 
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில சில பிரச்சினைகள் உருவாகும். சில சமயங்களிள் சண்டை சச்சரவுகளால் கோட், கேஸ் வழக்குகளை சந்திக்க நேரிடும். தூரதேச பிரயாணங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவும்.
 
பரிகாரம் : சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு 3 நெய் தீபமும் அர்ச்சனையும் செய்து வர துன்பம் குறையும்.
 
 
 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் தாழ்ந்த உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
மற்றவர்களினால் துன்பங்கள் நிகழ வாய்ப்புண்டு. கூட்டு தொழிலில் வீண் பிரச்சினை, கலகம் ஏற்படும். வாகனத்தில் கண்டம், சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் சொத்துக்களை இழக்க நேரிடும். பிறர் பேரில் வைத்து இருக்கும் சொத்துக்களால் நம்பிக்கை துரோகம் ஏற்படும்.
 
பரிகாரம் : ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து வர துன்பம் குறையும்.
 
 
 
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!
 
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடும். செய்யும் தொழிலில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலைச்சல் இல்லாத நிம்மதியான வாழ்க்கை உருவாகும். இக்கால கட்டத்தில் ஞாபக சக்தி குறைபாடால் ஏற்படும் பிரச்சினை தீரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். திருமணம் மற்றும் மறுமணம் கைகூடும்.
 
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வெள்ளிக்கிழமை வணங்கி வருவதுடன் லலிதா அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்து வர நன்மை உண்டாகும்.
 
 
 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!
 
தானியம், எண்ணெய் வகை வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகும். வருமானத்தில் மந்தநிலை ஏற்படும். புதிதாக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும்.
 
பரிகாரம் : சனிபகவானை வணங்கி 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர துன்பம் விலகும்.
 
 
 
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள். 

தேடிச் சென்றும் உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சொத்து விவகாரங்கள் முடிவுக்கு வருவதுடன் அதன் மூலம் கணிசமான தொகை காசுக்கு வந்து சேரும். தாய் வழி சொந்தங்களால் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் தீர்ந்து சுமூகமான நிலை ஏற்படும். மனைவி மூலம் நன்மையும் அதிர்ஷ்டமும் உண்டாகும். வங்கிக் கணக்கில் கணிசமான தொகை இருந்துகொண்டே இருக்கும்.
 
பரிகாரம் : தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு முந்திரியால் மாலை கட்டி அணிவிப்பதுடன் 7 நல்லெண்ணெய் தீபம் இட்டு வணங்கி வர நன்மை உண்டாகும்.
 
 
 
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே... எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
 
மாணவர்களின் கல்வியில் மேன்மை உண்டாகும். வாகனத்தில் பயணம் செய்யும்போது மிகவும் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். தொழிலில் இடமாற்றம் ஏற்படும். பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு துன்பமும் பகையும் அவமானமும் ஏற்படும். பணப் பிரச்சினை உண்டாகும். வீண் சிக்கல்கள் தோன்றி மறையும்.
 
பரிகாரம் : குரங்குக்கு உணவு கொடுப்பதால் நன்மை உண்டாகும்.
 
 
 
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
நீண்டநாள் தடைப்பட்ட திருமணம் நடைபெறும். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை நிலவும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அரசாங்கம் தொடர்பான கடன் பிரச்சினை நிவர்த்தி ஆகும். தூர தேச உறவுகளால் உதவி கிடைக்கும். இழந்த பதவிகளால் உள்ள பிரச்சினை நீங்கி புதிய பதவி கிடைக்கும்.
 
பரிகாரம் : சனீஸ்வரனுக்கு 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர நன்மை உண்டாகும்.
 
 
 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
 
மற்றவர்களுடைய பிரச்சினைகளால் துன்பமடைய நேரிடும். உத்தியோகத்தில் சிக்கல்கள் உண்டாகலாம்.  வேண்டாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கணவன் - மனைவி இடையே பிரிவு பிரச்சினை உருவாகும். மாணவர்களுக்கு தடை உண்டாகும். பெற்றோருக்கு நன்மை குறைவு.
 
பரிகாரம் : வியாழக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வர துன்பம் விலகும்.
 
 
 
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் வாக்குவான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!
 
அரசாங்கத்தால் உதவி உண்டாகும். புதிய சொத்து சேரும். காணி, வீடு புதிதாக வாங்குதல், இருக்கும் இடத்தில் வீடு கட்டுதல் போன்ற பலன் உண்டு. குடும்பத்தின் இடையே அந்நியோன்யம் வலுவடையும். வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கும். குடும்பத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால் நன்மை உண்டாகும்.
 
பரிகாரம் : அகஸ்தியரை வெள்ளிக்கிழமை அன்று வணங்கி வர நன்மை உண்டாகும்.
 
 
 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
 
சிலவகைகளில் சிரமங்கள் உண்டாகும். மனம் சஞ்சலமடையும். வீண் மனஸ்தாபம் உண்டாகும். கடன் சுமை அதிகரிக்கும். வீட்டைவிட்டு வேறு இடம் சென்று வாழும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தின் இடையே சண்டை சச்சரவு ஏற்படும். புத்தி பேதலிக்கும் நிலை ஏற்படும். அடகு வைத்த சொத்துக்கள் நகைகள் மீட்க முடியாத நிலை உருவாகும்.
 
பரிகாரம் : பெருமாள் கோவிலுக்கு புதன்கிழமை சென்று 12 நெய் தீபம் போட்டு வர துன்பம் விலகும்.
 
குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்து பலன்களும் ஒவ்வொரு இராசிக்கும் உள்ள பொது பலன்களே ஆகும். இதன் சரியான பலன்களை அறிய அவரவர் ஜாதகத்தின் படி திசை, புத்தி, அந்தரம், கிரக நிலை இவற்றை கொண்டே துல்லியமான பலன்களை கணிக்க முடியும்.
"குரு பெயர்ச்சி பலன்கள் - 2013" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
malarvizhi 24-07-2013 11:23 AM
விருதாசலம் வட்டம், நல்லுர் கிராமம், ராசி நல்லா இருக்கு.
Reply .
0
0
Thineshkumar 25-10-2013 06:34 AM
anaku velinadu sentru nerantharamaka vasika santharpam unda anathu palan padi
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty