2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சபைகள் மாற்றம் விவகாரம்: எதிர்த்து மற்றுமொரு மனு

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சின் கீழிருந்த அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகிய இரண்டு சபைகளையும், வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றுமோர் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சிசிர ஜயகொடியினால், இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

இவ்விரண்டு லொத்தர் சபைகளையும், வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவந்தமைக்கான அதிகாரத்தை இல்லாமற்செய்து கட்டளையிடுமாறும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இவ்விரு சபைகளும் இதுவரை காலமும், நிதியமைச்சின் கீழே இருந்தது. எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, இவ்விரு சபைகளும் வெளிவிவகார அமைச்சின் கீழ், கொண்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தீர்மானித்துள்ளார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலத்தின் மூலமாகவே இவ்விரு சபைகளும் நிறுவப்பட்டுள்ளன. ஆகையினால் அவ்விரு சபைகளும் நிதியமைச்சின் கீழே இருக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X