2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஜூன் 15அன்று விசேட கோரிக்கை விடுக்கலாம்’

Thipaan   / 2017 மே 25 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கில், விசேட கோரிக்கை விடுப்பதற்கான தினமாக ஜூன் மாதம் 15ஆம் திகதியை, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (24) குறித்தது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5 மில்லியன் நாட்குறிப்புகளை திவிநெகும திணைக்களத்தினூடாக அச்சிட்டு, அரசுக்கு 29.4 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக பசில் ராஜபக்‌ஷவும் இரண்டாவது சந்தேகநபரான, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் பெயர்குறிப்பிடப்பட்டிருந்தனர். 

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் நேற்று(24) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பசில் ராஜபக்‌ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, தாம் விசேட கோரிக்கையொன்றை விடுக்கவேண்டும் என, மன்றில் தெரிவித்தார். 

நேற்றையதினம், வழக்கு விசாரணை இடம்பெறவிருந்த நிலையில், தமக்கான வேறொரு தினத்தை வழங்குமாறும், அன்றைய தினத்தில் இந்த விசேட கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜூன் 15ஆம் திகதியை நீதிபதி குறித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .