2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘செம்பீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் இருக்கவில்லை’

George   / 2017 மே 25 , பி.ப. 10:50 - 2     - {{hitsCtrl.values.hits}}

“திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் இருந்ததற்கான அடையாம் இல்லை. விகாரையொன்று இருந்தமைக்கான அடையாளமே உள்ளது” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மார்ச் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றில் நேற்று (24) பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவலிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுவதற்கும் அங்கு புராதன கோவிலொன்று இருந்ததற்கும் எவ்வித அடையாளங்களும் இல்லை. 

குறித்த பகுதியில், புராதன விகாரை இருந்ததற்கான அடையாளம் உள்ளது. எனவேதான், அங்கு புதிய கோவிலொன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொல்பொருள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச்சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன தொல்பொருள் திணைக்களத்தால் சிதைக்கப்படவில்லை.  

எனினும், அப்பகுதிகளில் வாழும் சிலரால், பௌத்த மதத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் இடங்களையும், புராதனச் சின்னங்களையும் அழிக்கும் அச்சுறுத்தல் இருக்கின்றது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருட்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்கின்றபோது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சார்ந்த தொல்பொருட்கள் தொடர்பிலான அறிவார்ந்த அதிகாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் இணைந்துசெயற்பட்டுவருகின்றனர். 

கன்னியா வெந்நீரூற்று கிணறு, அங்குள்ள புராதன விவகாரை உள்ளிட்டவை தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதை பிரதேச சபையிடம் ஒப்படைப்பதற்கு சட்டரீதியாக இடமில்லை” என்றார். 


You May Also Like

  Comments - 2

  • rajaratnam Friday, 26 May 2017 04:15 AM

    சம்பந்தப்பட்ட விடயப்பரப்பு சம்பந்தமாக தொடர்புபட்ட அமைச்சு எதனையும் கூறவில்லை. அனைவரும் ஏதேதோ கதைக்கின்றனர். பாராளுமன்றத்தில் கதைக்கப்படவேண்டிய விடயப்பரப்பு "கண்டுபிடிக்கப்பட்டது or எடுக்கப்பட்டது. புத்தரோ அல்லது சிவனோ என்பதல்ல". மாறாக, செய்ய வேண்டிய செயலினை செய்ய விடாது தடுக்க எத்தனித்தது யார். சட்டம் மற்றும் ஒழுங்கு நடபடி முறைமைகள் பாரபட்சமாக கையாளப்பட்டுள்ளதா என்பதுவே. அடிப்படையில், மதவாதம் என்பது அடக்குமுறையின் ஓர் வடிவமே. அது எவரால் செய்யப்பட்டாலும் ஏற்க முடியாததே. Please ACT accordingly.

    Reply : 0       0

    Paskaran kurukkal Friday, 26 May 2017 06:09 AM

    கல்வி அமைச்சர் அகில விராஜ் தெரிவித்த கருத்தை மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இவர்கள்தானா நாட்டில் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போறவர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .