2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'தமிழர்களின் தங்கம்: தகவல் இல்லை’

George   / 2017 மே 26 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

"அகதி முகாமில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை" என, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான கேள்வி பதில் சுற்றின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எழுப்பியிருந்த கேள்வி 4ஆவது தடவையாகம் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது.

“யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டதா?" என, என வாசுதேவ எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கான பதிலை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன், நேற்றைய தினம் வழங்குவதற்கு முன்வந்தார்.

சுவாமிநாதன் பதிலளிக்கையில்,  'யுத்தத்துக்கு பின்னர் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கான தங்குவதற்கான வசதிகள் வவுனியா மாவட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. இம்மக்களது சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்து எந்தவித தகவல்களும் வவுனியா பிரதேச செயலகத்திடம் இல்லை" என்றார்.

'தமது தங்கம் மற்றும் ஆபரணங்களை திருப்பிக்கொடுக்கவில்லை என முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெற்றுள்ளதா?" என, என வாசுதேவ எம்.பி மற்றுமொரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “தகவல்கள் எதுவும் இல்லையெனவும், நடவடிக்கை எடுப்பது எனது அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட கேள்வி இல்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X