2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நல்லிணக்கத்துக்கு 'ஆதரவா இல்லையா?'

Kogilavani   / 2016 ஜூலை 21 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கும் இடையில், நல்லிணக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில், வாய்மொழிமூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, தேசிய நல்லிணக்கச் செயலாற்றுப் படையணி என்ற ஒன்று நிறுவப்பட்டுள்ளதா என, விமல் எம்.பி, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

அக்கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, அவ்வாறு படையணி ஒன்று ஏற்படுத்தப்படவில்லை என்றும். ஆகையால், ஏனையக் கேள்விகள் ஏற்புடையதல்ல என்றும் கூறியமர்ந்தார்.  இதனையடுத்து எழுந்த விமல் எம்.பி, தேசிய நல்லிணக்கச் செயலாற்றுப் படையணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியதாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறான செயலாற்றுப் படையணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, சேர்க்கப்பட்டுள்ளமை குறித்துத் தெரியாது, அது குறித்து சந்திரிகாவிடமே தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்கலாம் தானே, நீங்களும் , சந்திரிகாவும்; பழைய நண்பர்கள் எனவும் தெரிவித்தார்.'சரி... சரி... நீங்கள், நல்லிணக்கத்துக்கு ஆதரவா? இல்லையா?' என்றும் வினவினார்.

இக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காத விமல் எம்.பி, யாழ். சம்பவத்தை உதாரணம் காட்டி, மிக இலாவகமாக நழுவிச் சென்று விட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .