2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஆறாமிடத்துக்கு முன்னேறினார் வோணர்

Editorial   / 2020 ஜனவரி 21 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் டேவிட் வோணர் முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 146 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, நேற்று  வெளியிடப்பட்ட தரவரிசையில், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை டேவிட் வோணர் அடைந்திருந்தார்.

இதேவேளை, இத்தொடரில் 162 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், 11ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்திருந்தார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. ரோஹித் ஷர்மா, 3. பாபர் அஸாம், 4. பப் டு பிளெஸி, 5. றொஸ் டெய்லர், 6. டேவிட் வோணர், 7. கேன் வில்லியம்சன், 8. ஜோ றூட், 9. குயின்டன் டி கொக், 10. ஆரோன் பின்ஞ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ட்ரெண்ட் போல்ட், 3. முஜீப் உர் ரஹ்மான், 4. ககிஸோ றபாடா, 5. பற் கமின்ஸ், 6. கிறிஸ் வோக்ஸ், 7. மொஹமட் ஆமிர், 8. மற் ஹென்றி, 9. லொக்கி பெர்கியூசன், 10. மிற்சல் ஸ்டார்க்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பென் ஸ்டோக்ஸ், 2. மொஹமட் நபி, 3. இமாட் வசீம், 4. கிறிஸ் வோக்ஸ், 5. ரஷீட் கான்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .