2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இருபதுக்கு- 20 தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2019 நவம்பர் 14 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லக்னோவில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஆப்கானிஸ்தானை மேற்கிந்தியத் தீவுகள் ஊதித் தள்ளியபோதும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது போட்டித்தன்மையானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஏனெனில், உலகளாவிய ரீதியில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் பந்துவீச்சில் பிரகாசித்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இதுதவிர, ஹஸரத்துல்லா ஸஸாய், மொஹமட் நபி, அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லா ஸட்ரான் என அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக் கூடிய வீரர்களையும் ஆப்கானிஸ்தான் கொண்டுக்கையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, எவின் லூயிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், நிக்கலஸ் பூரான் போன்ற அண்மைய காலங்களில் பிரகாசித்த வீரர்களுடன், சிரேஷ்ட வீரர்களான லென்டில் சிமொம்ஸ், தினேஷ் ராம்டீன் ஆகியோரின் மீள்வருகை மேற்கிந்தியத் தீவுகளுக்கு பலத்தை வழங்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்தில் ஆப்கானிஸ்தானும், 10ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் காணப்படுகின்றன.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை ஆப்கானிஸ்தான் வெள்ளையடித்தால் ஏழாமிடத்துக்கு அவ்வணி முன்னேறும் என்பதோடு, ஏழாமிடத்திலிருக்கும் இலங்கை எட்டாமிடத்துக்கு பின்தள்ளப்படும்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானை 3-0 என மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளையடித்தால், அவ்வணி எட்டாமிடத்துக்கு முன்னேறுவதோடு, ஒன்பதாமிடத்துக்கு ஆப்கானிஸ்தான் கீழிறங்குவதுடன், 10ஆம் இடத்துக்கு பங்களாதேஷ் கீழிறங்கும்.

மேற்குறிப்பிட்டவை தவிர தொடரின் வேறெந்த முடிவும் தரவரிசை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .