2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கனடாவை வென்று சம்பியனானது ஸ்பெய்ன்

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்றுவந்த டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிகள் தொடரில் ஸ்பெய்ன் சம்பியனானது.

நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கனடாவை வென்றே, ஆறாவது தடவையாக டேவிஸ் கிண்ணத்தை ஸ்பெய்ன் கைப்பற்றியிருந்தது.

முதலில், கனடாவின் ஃபீலிக்ஸ் அகர்-அலியாஸிம்மேயை 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் உலகின் ஒன்பதாம்நிலை வீரரான ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட் வென்றபின்னர், கனடாவின் டெனிஸ் ஷபலோவ்வை 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் உலகின் முதல்நிலைவீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் வென்றமையையடுத்தே 2-0 என கனடாவை வென்று, 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது முதலாவது டேவிஸ் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் முறையே பிரித்தானியா, ரஷ்யாவை வென்று இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்னும், கனடாவும் முன்னேறியிருந்தன.

ஒரு வாரமான நடைபெற்ற இத்தொடரில் ஐந்து தனிநபர் போட்டிகளிலும், மூன்று இரட்டையர் போட்டிகளிலும் ஒரு செட்டையும் இழக்காது வென்றிருந்த ரஃபேல் நடால், தொடரின் சிறந்த வீரராக வாக்களிக்கப்பட்டிருந்தார்.

அந்தவகையில், மேற்குறித்த போட்டியுடன் டேவிஸ் கிண்ண தனிநபர் போட்டிகளில் 29ஆவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுள்ள ரஃபேல் நடால், 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் டேவிஸ் கிண்ண தனிநபர் போட்டிகளில் தோல்வியைத் தளுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய விளையாட்டுக்களில் உலகக் கிண்ணம் போன்றதான இத்தொடரில் 18 அணிகள் பங்கேற்று, மும்மூன்று அணிகளாக ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழு வெற்றியாளர்களும், குழுவில் மிகச்சிறந்த இரண்டாமிடங்களைப் பெற்ற இரண்டு அணிகளும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .