2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனானது றியல் மட்ரிட்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரில் றியல் மட்ரிட் சம்பியனானது. சவுதி அரேபியாவில் நேற்று  இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட்டை பெனால்டியில் வென்றே றியல் மட்ரிட் சம்பியனாகியிருந்தது.

ஸ்பானிய லா லிகா தொடரில் முதலிரண்டு அணிகளுக்கும், கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அணிகளுக்குமிடையிலான இவ்வாண்டு ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடர் இடம்பெற்றிருந்தது.

இதில், கோப்பா டெல் ரே சம்பியன்களான வலென்சியாவை வென்று லா லிகாவில் மூன்றாமிடம் பெற்ற றியல் மட்ரிட் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதுடன், லா லிகா சம்பியன்களும், கோப்பா டெல் ரே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பார்சிலோனாவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு அத்லெட்டிகோ மட்ரிட் முன்னேறியிருந்தது.

லா லிகா சம்பியன்களாகவும், கோப்பா டெல் ரே இறுதிப் போட்டி வரையிலும் பார்சிலோனா முன்னேறியிருந்ததால், லா லிகாவில் மூன்றாமிடம் பெற்ற றியல் மட்ரிட் இத்தொடருக்குத் தகுதிபெற்றிருந்தது.

இறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், மேலதிக நேரத்துக்கு போட்டி சென்ற நிலையில், அதில் அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரர் அல்வரோ மொராட்டா கோல் பெறச் சென்றபோது றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரர் பெடெரிக்கோ வல்வேர்டே அவரை வீழ்த்த, சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், மேலதிக நேரத்திலும் கோலெதுவும் பெறப்படாத நிலையில் பெனால்டியில் 4-1 என்ற ரீதியில் றியல் மட்ரிட் வென்றிருந்தது.

றியல் மட்ரிட் சார்பாக, டனி கர்வகால், றொட்றிகோ, லூகா மோட்ரிச், சேர்ஜியோ றாமோஸ் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்திருந்த நிலையில், அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக கெய்ரால் ட்ரிப்பியர் மாத்திரமே தனது பெனால்டியை உட்செலுத்தியிருந்தார். சாவுல் நிகூஸின் பெனால்டி கோல் கம்பத்தில் பட்டு வெளியில் சென்றிருந்ததுடன், தோமாஸ் பார்ட்டியின் பெனால்டியை றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் திபோ கோர்துவா தடுத்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .