2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாப்போலியை வென்றது இன்டர் மிலன்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், நாப்போலியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் இன்டர் மிலன் வென்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் கோல் பெறும் வாய்ப்புகளை நாப்போலி கொண்டிருந்தபோதும் 13ஆவது நிமிடத்தில் தனதணியின் அரைப்பகுதிக்குள் பந்துப்பரிமாற்றமொன்றை இடைமறித்த இன்டர் மிலனின் முன்களவீரர் றொமெலு லுக்காக்கு, முன்னேறிச் சென்று கோலைப் பெற்ற நிலையில் இன்டர் மிலன் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, இன்டர் மிலனின் கோல் பெறும் இரண்டு வாய்ப்புகளை நாப்போலியின் கோல் காப்பாளர் அலெக்ஸ் மெரெட் தடுத்திருந்தபோதும், 33ஆவது நிமிடத்தில் றொமெலு லுக்காக்குவின் உதையை அவர் தடுத்தபோதும் அது அவரது கால்களுக்குள்ளால் கோலாகிய நிலையில் தமது முன்னிலையை இன்டர் மிலன் இரட்டிப்பாக்கியது.

இந்நிலையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில், சக முன்களவீரர் ஜொஸெ கல்லகோனிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய நாப்போலியின் முன்களவீரர் அர்கடியுஸ் மிலிச், இன்டர் மிலனின் முன்னிலையை ஒரு கோலாகக் குறைத்தார்.

பின்னர் முதற்பாதி முடிவடைவதற்கு முன்பாக கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தும் வாய்ப்பை அர்கடியுஸ் மிலிச் கொண்டிருந்தபோதும், கோல் கம்பதுக்கு வெளியே பந்தைத் தலையால் முட்டிச் செலுத்திருந்தார்.

இந்நிலையில், போட்டியின் 62ஆவது நிமிடத்தில் இன்டர் மிலனின் மத்தியகளவீரர் மத்தியாஸ் வெசினோவிடமிருந்து வந்த பந்தை நாப்போலியின் பின்களவீரரான கொஸ்டஸ் மனோலஸ் இடைமறித்தபோதும், அது இன்டர் மிலனின் முன்களவீரரான லொட்டரோ மார்ட்டின்ஸிடம் செல்ல அவர் அதைக் கோலாக்கியதோடு இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றிருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற கைதரியுடனான போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹட்-ட்ரிக் கோல்கள், கொன்ஸலோ ஹியூகைனின் கோலோடு 4-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றிருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற சம்ப்டோரியாவுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஏ.சி மிலன் முடித்துக் கொண்டது. இப்போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் லா கலக்ஸியின் முன்னாள் வீரரான ஸல்டான் இப்ராஹிமோவிச் ஏ.சி மிலன் சார்பாக களமிறங்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X