2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொச்செட்டினோவை நீக்கிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோவை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் நேற்று  நீக்கியுள்ளது.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முகாமையாளராக 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்த மெளரிசியோ பொச்செட்டினோ, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாம், மூன்றாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களுக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை கொண்டு வந்திருந்தார். தவிர, கடந்த பருவகால ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை அழைத்துச் சென்றிருந்தார்.

எவ்வாறெனினும், நடப்புப் பருவகாலத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முதல் சில மாதங்கள் ஏமாற்றமளிப்பதாய் காணப்பட்டிருந்தன. தமது ஆரம்ப 12 பிறீமியர் லீக் போட்டிகளில் மூன்று போட்டிகளில் மாத்திரமே டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்ததுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 14ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

இதுதவிர, இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலும், நான்காம் நிலைக் கழகமான கொல்செஸ்டர் யுனைட்டெட்டால் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வெளியேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், மெளரிசியோ பொச்செட்டினோவின் உதவிப் பயிற்றுவிப்பாளர் ஜெஸுஸ் பெரேஸ் மற்றும் அவரது ஏனைய பயிற்சியாளர் குழாமும் அவர்களது பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் முகாமையாளரான ஜொஸே மொரின்யோவை, தமது புதிய முகாமையாளராக 2022-23 பருவகால முடிவு வரையான ஒப்பந்தமொன்றில் இன்று பெயரிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X