2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மெட்வெடெவ்வை வென்றார் நடால்

Editorial   / 2019 நவம்பர் 15 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் நான்காம்நிலை வீரரான டேனியல் மெட்வெடெவ்வை, உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடால் போராடி வென்றுள்ளார்.

நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அன்ட்ரே அகாஸி குழுப் போட்டியில், டை பிரேக்கர் வரை சென்ற முதலாவது செட்டை ரஷ்யாவின் டேனியல் மெட்வெடெவ் 7-6 (7-3) என்ற ரீதியில் வென்றார்.

இந்நிலையில், இரண்டாவது செட்டை 6-3 என வென்ற ஸ்பெய்னின் ரஃபேல் நடால், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 1-5 என பின்தங்கியிருந்தபோதும் 7-6 (7-4) எனக் கைப்பற்றி தனது அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டார்.

இதேவேளை, நேற்று அதிகாலை நடைபெற்ற மற்றைய அன்ட்ரே அகாஸி குழுப் போட்டியில், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் உலகின் ஏழாம்நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை, உலகின் ஆறாம்நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டார்.

அந்தவகையில், தான் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை வெல்ல வேண்டிய ரஃபேல் நடால், நாளை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நடப்புச் சம்பியனான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை டேனியல் மெட்வெடெவ் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்.

இந்நிலையில், ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு டேனியல் மெட்வெடெவ்வை வெல்ல வேண்டும். தவிர, டேனியல் மெட்வெடெவ்விடம் மூன்று செட்களில் தான் தோல்வியடைந்தது, ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை ரஃபேல் நடால் வென்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் தகுதிபெறுவார்.

இதேவேளை, டேனியல் மெட்வெடெவ் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டுமாயின், அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை இரண்டு செட்களில் வெல்வதுடன், ரஃபேல் நடாலை ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .