2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மப்பேயைக் கைச்சாத்திடுகிறது றியல் மட்ரிட்?

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பேயைக் கைச்சாத்திடுவது குறித்து ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் வீரரான கிலியான் மப்பேயை 400 மில்லியன் யூரோக்களுக்கு கைச்சாத்திடுவது குறித்து றியல் மட்ரிட் ஆராய்வதாகக் கூறப்படுகிறது.

தற்போது 21 வயதாகும் கிலியான் மப்பே, தான் இன்னொரு பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவில் இருந்த சமயமே றியல் மட்ரிட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2017ஆம் ஆண்டு அவர் பரிஸ் ஸா ஜெர்மைனைக்குச் சென்றிருந்தார்.

இதுவரையில் 104 லீக் 1 போட்டிகளில் விளையாடி 67 கோல்களைப் பெற்றுள்ள கிலியா மப்பே, 31 கோல்கள் பெறப்படுவதற்கு துணை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .