2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

றியல் பெட்டிஸிடம் தோற்றது றியல் மட்ரிட்

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில்,றியல் பெட்டிஸின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் றியல் மட்ரிட் தோற்றது.

இப்போட்டியில் றியல் பெட்டிஸின் பின்களவீரரான மார்க் பார்ட்ரா கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய பந்தானது கோல் கம்பத்துக்கு மேலால் சென்றதுடன், றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளரான திபோ கோர்துவாவை றியல் பெட்டிஸின் மத்தியகளவீரரான ஜோக்கின் தாண்டி கோல் கம்பத்தை நோக்கி பந்தைச் செலுத்தியபோதும் கோல் எல்லையில் வைத்து றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரர் லூகா மோட்ரிட்ச் தடுத்திருந்தார்.

பின்னர் றியல் பெட்டிஸின் மத்தியகளவீரரான நபில் பெகிரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை கோல் கம்பத்துக்கு மேலால் திபோ கோர்துவா தட்டி விட்டிருந்தார்.

இந்நிலையில், போட்டியின் 40ஆவது நிமிடத்தில் றியல் பெட்டிஸின் சிட்னெய் பெற்ற கோலின் மூலமாக அவ்வணி முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், றியல் மட்ரிட்டின் பின்களவீரரான மார்ஷெலோவை சிட்னெய் வீழ்த்திய நிலையில் போட்டியின் முதற்பாதி முடிவில் வழங்கப்பட்ட பெனால்டியை றியல் மட்ரிட்டின் முன்களவீரரான கரிம் பென்ஸீமா கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர் கரிம் பென்ஸீமாவின் பந்துப்பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட றியல் பெட்டிஸின் மத்தியகளவீரரான அன்ட்ரேஸ் குவார்டடோ வழங்கிய பந்தை மாற்றுவீரராகக் களமிறங்கிய றியல் பெட்டிஸின் முன்களவீரரான கிறிஸ்டியன் டெல்லோ கோலாக்க றியல் பெட்டிஸ் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய றியல் மட்ரிட்டின் பின்களவீரரான பெர்லான்ட் மென்டியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது றியல் பெட்டிஸின் கோல் காப்பாளர் ஜோயல் றொப்லேஸால் அபாரமாக கோல் கம்பத்தில் தட்டிவிடப்பட்டதுடன், கரிம் பென்ஸீமாவின் போட்டியின் 95ஆவது நிமிட கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்த நிலையில் 1-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் நடப்புச் சம்பியன்கள் பார்சிலோனா காணப்படுகிறது. 58 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனா காணப்படுகையில், 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும், 47 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .