2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஸ்பெய்னின் முகாமையாளராகத் திரும்பிய என்றிக்கே

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராக தனது பதவிக்கு லூயிஸ் என்றிக்கே நேற்று  திரும்பியுள்ளார்.

முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக ஸ்பெய்ன் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக இவ்வாண்டு ஜூன் மாதத்தில் லூயிஸ் என்றிக்கே விலகியிருந்தார். இரண்டு மாதங்களுக்கு பின்னர், என்புப் புற்றுநோயுடனான ஐந்து மாத போராட்டத்தைத் தொடர்ந்து தனது ஒன்பது வயது மகள் ஸ்கானா இறந்ததை லூயிஸ் என்றிக்கே வெளிப்படுத்தியிருந்தார்.

ஸ்பெய்ன் லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்னாள் முகாமையாளர் லூயிஸ் என்றிக்கே இல்லாத இக்காலத்தில், ஸ்பெய்ன் சர்வதேச கால்பந்தாட்ட அணியை றொபேர்ட் மொரேனோ வழிநடத்தியிருந்தார்.

எவ்வாறெனினும், லூயிஸ் என்றிக்கே மீண்டும் வரத் தீர்மானித்தால் தான் வழிவிடுவேன் என இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் றொபேர்ட் மொரேனோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்பெய்னின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸுடன் கதைத்த ஸ்பானிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் றூபியாலெஸ், லூயிஸ் என்றிக்கே மற்றும் றொபேர்ட் மொரேனோவுக்கிடையிலான மோசமடையும் உறவு காரணமாக அவர்கள் சேர்ந்து பணியாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

லூயிஸ் என்றிக்கேயுடன் ஸ்பெய்ன், பார்சிலோனா, இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான செல்டா விகோ, இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவில் றொபேர்ட் மொரேனோ பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பாணி, நகர்வின் தொடர்ச்சியை மேலும் லூயிஸ் என்றிக்கே எதிர்பார்த்திருந்த நிலையில், ஸ்பெய்னின் பயிற்சியாளராக றொபேர்ட் மொரேனோவின் நகர்வாலேயே இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X