2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

Editorial   / 2018 ஜூலை 06 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ்ச் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு,  அண்மையில் சங்கத் தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

அதில் பின்வருவோர் நடப்பாண்டுக்கான நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.  

தலைவராக   ஜி.இராஜகுலேந்திரா  போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

துணைத்தலைவர்களாக  ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன், திரு.த.அரியரத்தினம்,  ஆ.குகமூர்த்தி,  வ.மகேஸ்வரன், திருமதி பத்மா சோமகாந்தன், திருமதி சந்திரபவானி பரமசாமி ஆகியோர் தெரிவாகினர்.

பொதுச்செயலாளராக  க.க.உதயகுமார்   போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். துணைப் பொதுச் செயலாளராக  ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியும் நிதிச்செயலாளராக  தம்பு சிவசுப்பிரமணியமும், துணை நிதிச் செயலாளராக  கே.பொன்னுத்துரையும் போட்டியின்றி தெரிவாகினர்.

உறுப்புரிமைச் செயலாளராக அ.எதிர்வீரசிங்கம் இலக்கியக் குழுச்செயலாளராக தெ.மதுசூதனனும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிலையமைப்புச் செயலாளராக மா.தேவராஜாவும் நூலகச் செயலாளராக  க.இரகுபரனும் கல்விக்குழுச் செயலாளராக மா.கணபதிப்பிள்ளையும் போட்டியின்றி தெரிவாகினர்.

ஆட்சிக்குழு உறுப்பினர்களாக திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா, அகமது ஜின்னாஹ் ஷரிபுத்தீன், திருமதி வசந்தி தயாபரன், ந.காண்டீபன், சி.அனுஷ்யந்தன், திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, திருமதி வளர்மதி சுமாதரன், க.குமரன், உடப்பூர் வீரசொக்கன், சின்னத்தம்பி ஸ்ரீதயாளன், அந்தனி ஜீவா, தியாகராசாஐயர் ஞானசேகரன், மா.சடாட்சரன், கதிரவேலு மகாதேவா, வேலுப்பிள்ளை இளஞ்செழியன், ப.க.மகாதேவா, திருமதி அரியரத்தினம் புவனேஸ்வரி, சண்முகம் முருகானந்தன், த.கோபாலகிருஷ்ணன், மு.மனோகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .