2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நூர்தீனின் ‘சாட்சியங்கள்’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் எழுதிய, “சாட்சியங்கள்” எனும் நூல் வெளியீட்டு விழா, காத்தான்குடி ஹோட்டல் பீச்வேயில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவருமான என்.எம்.அமீன், பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

வீரகேசரி வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகன், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா, வசந்தம் தொலைக்காட்சி செய்திப்பிரிவு முகாமையாளர் எம்.எஸ்.முகம்மட் இர்பான், மெட்ரோ நியூஸ் ஆசிரியர் ஆர்.சேதுராமன், விடிவெள்ளிப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ், மெட்ரோ நியூஸ் செய்தி ஆசிரியர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஆகியோர், கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் உட்பட ஊடகவியலாளர்கள், முக்கியஸ்தர்கள், உலமாக்கள், அதிகாரிகள் எனப் பலரும், இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நூலின் விமர்சன உரையை, வசந்தம் தொலைக்காட்சி செய்திப்பிரிவு முகாமையாளர் எம்.எஸ்.முகம்மட் இர்பானும், வெளியீட்டுரையை விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

123 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் ஊடகவியலாளர் நூர்தீன், தேசியப் பத்திரிகைகளில் எழுதிப் பிரசுரமான 22 கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .