2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முற்றத்து பெருநாள் இலக்கிய விழா

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம் ஏற்பாடு செய்துள்ள முற்றத்து பெருநாள் இலக்கிய விழா, நாளை சனிக்கிழமை(9)  பிற்பகல் 4 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர்; கூடத்தில் கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் என்பன இடம்பெறவுள்ளன. மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும் சமூகஜோதி  தொழிலதிபர் ஏ.எல்.எம்.மீராசாஹிபு கௌரவ அதிதியாகவும் பாவலர்; சாந்தி முகைதீன், கவிமணி எம்.எச்.எம்.புஹாரி,  பலாஹி ஜூனைதா செரீப், எம்.ஐ.சின்னலெப்பை, ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோர்; இலக்கிய அதிதிகளாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அருளைச் சொரிந்த அற்புத மாதம் எனும் தலைப்பில் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெறும் கவியரங்கில் மதியன்பன் மஜீத், பதியதளாவ பாறூக், முகைதீன்சாலி, எம்.ரீ.எம்.யூனூஸ், ஏரீ.எம்.ரியாஸ், காத்தான்குடி பௌஸ், அபூமின்ஹாஜ், கலைமதி றபாய்தீன் ஆகியோர் கவிமழை பொழியவுள்ளனர்.

'மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தந்தது அந்தக்காலம் இல்லை இந்தக்காலம்' எனும் தலைப்பில் கலாபூசனம் மஹ்ரூப் கரீம் தலைமையில் பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது. இதில் கலாபூசனம் காத்தான்குடி பாத்திமா, ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், முகைதீன் சாலி அபூமின்ஹாஜ், திருமதி ஜாஹிதா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .