2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரான்ஸின் தேசிய கௌரவ விருது குமார் டி சில்வாவுக்கு

A.P.Mathan   / 2012 நவம்பர் 02 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரெஞ்சு நாட்டு அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான தூதுவர் திருமதி கிறிஸ்டின் றொபிஷோன் ‘Chevalier dans l’Ordre des Arts et des Lettres’ (Chevalier in the Order of Arts and Letters) என்ற கௌரவ விருதை குமார் டி சில்வாவுக்கு கடந்த புதன்கிழமை வழங்கி கௌரவித்தார்.

'The Order of Arts and Letters' (கலை மற்றும் எழுத்துத்துறை போன்றவற்றுக்கு இவ்விருது வழங்கப்படும்) 1957ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி பிரெஞ்சு கலாசார அமைச்சரினால் இச் செயல்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. பிரெஞ்சு நாட்டின் கலாசார மரபுரிமை தொடர்பிலான விழிப்புணர்வு மற்றும் வளமூட்டுதல் நடவடிக்கைகளை உலகெங்கும் ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட பெருமைமிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களுக்கு அங்கீகாரமளிக்கும் நோக்கிலேயே இக் கௌரவ விருது வழங்கப்படுகின்றது.

கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் அதிகமான காலம் இலங்கையில் பிரெஞ்சு கலாசாரத்தை ஊக்குவிப்பதற்காக குமார் டி சில்வா ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பினை கௌரவிக்கும் விதத்திலேயே இவ் மதிப்பிற்குரிய விருதை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .